உங்க வீட்டில் கறுத்துப்போன கல்பதித்த கவரிங் நகைகள் இருக்கா? இதை ஐந்து நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்கலாம்..!
வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம்.
பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய நகைகளுக்கு பொருந்தாது. அதனால் வேறு நிறக்கல் வைத்திருக்கக்கூடிய நகைகள் இருந்தால் இந்த முறையினை கொண்டு பளிச்சென தங்கம் போல மின்ன வைக்கமுடியும்.
முதலில் இதற்கு அவசியமான ஒரு பொருள் பூந்திக்கொட்டை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருளான பூந்திக்கொட்டைகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உடைத்து அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கி விட்டு மேல் உள்ள தோலை மட்டும் நல்ல தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். இது ஊறிய பிறகு அந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நன்றாக நுரை பொங்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி விடலாம். இது ஆறிய பிறகு உள்ளே இருக்கும் பூந்திக்கொட்டகளையும் நன்கு நசுக்கி விட்டு நுரைகளை அதிகப்படுத்திய பிறகு இந்த விழுதை வெளியேற்றிவிடலாம்.
பிறகு இதனுடன் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எந்த பல் துலக்கும் பேஸ்ட் ஆக இருந்தாலும் சரி அதில் இருந்து அரை ஸ்பூன் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக கலக்கி விடவும். இதில் நீங்கள் வைத்திருக்கும் கல் பதித்த நகைகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்து மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அழுத்தமாக சுத்தம் செய்யக்கூடாது. கல் பதித்த நகைகள் என்பதால் அழுத்தம் கொடுத்தால் கல் கொட்டி விடும் அபாயம் உண்டு. அதனால் மெதுவாக துடைக்க வேண்டும், பின்னர் ஒரு காட்டன் துணியை கொண்டு நன்கு துடைத்து விடவும். அவ்வளவுதான் உங்களது நகை பொலிவோடு தங்கம் போல பளபளவென மின்ன தொடங்கும்.