கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி?

கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி என்று பார்ப்போம்.
பெண் என்பவள் மிகவும் தைரியமானள். ஆண் பெண் இருவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பெண்களைப் பொறுத்தவரையில் சகிப்புத்தன்மை, பொறுமை அதிகமாக உண்டு. இதனால்தான் இவர்களால் எல்லா காரியங்களிலும் மன தைரியத்துடனும் பொறுமையுடனும் செயல்பட முடிகிறது. ஒரு பெண் குழந்தையாக இருந்து சிறுமியாக, குமரியாக இருந்து ஒரு பொறுப்புள்ள மனைவியாக மாறி மருமகள், அம்மா, பாட்டி என பல விஸ்வரூபமெடுத்து பலருக்கும் தொண்டு செய்து தனது வாழ்க்கையையே பிறருக்காக அர்ப்பணிக்க கூடியவள்.
தற்போது இந்த பதிவில் ஆனால் உனக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பணியாற்றி சாதனை புரிந்து வருகின்றனர் ஆனாலும் தனது குடும்ப காரியங்களிலும் தனது கடமையை மீறாமல் தாய்க்குத் தாயாக மனைவிக்கு மனைவியாக இருந்து செயல்பட்டு வருகிறாள்.
பெண்களைப் பொறுத்தவரையில் திருமணத்திற்குப் பின் கணவன் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதுதான் அவர்களது மிகப்பெரிய பங்களிப்பாக கூறப்படுகிறது. திருமண பந்தம் என்பது நீண்ட தூரம் பயணம் கணவனும் மனைவியும் இரண்டு மாடுகள் பூட்டிய வண்டி போல இந்த இரண்டும் ஒரே நேர்கோட்டில் சென்றால் தான் வாழ்க்கையில் தங்களது லட்சியத்தை அடைய முடியும். இல்லை என்றால் வேறு கோணத்தில் செல்லும் பொது வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிறது.
பெண்கள் பொதுவாக திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் வந்தவுடன் கணவரின் பெற்றோரை தங்களது பெற்றோர் போல கவனித்துக் கொண்டால் வாழ்க்கையில் பல காரியங்களை சாதிக்கலாம். கணவனின் பெற்றோரை அன்பாய், அழகாய், உரிமையாய், பாசமாய் அத்தை மாமா என்று அழைக்கும் போது குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு இடமில்லை கணவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என கணவரின் பெற்றோரிடம் கேட்டறிந்து அவருக்கு பிடித்த மாதிரி சமைத்து பரிமாறினால், கணவரின் நெஞ்சில் எப்போதுமே நீங்கா இடத்தை பிடிக்கலாம்.
மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால், கணவன் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது மனைவியாக திருத்தமாய் உடையணிந்து இருக்க வேண்டும் இதுதான் அவர்களுக்கு நம் மீது பாசத்தையும் மரியாதையும் அதிகரிக்க செய்கிறது
அவரிடம் பேசும் பொழுது எப்பொழுதும் மரியாதையாகவும் பாசமாகவும் பேச வேண்டும் சில நேரங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான் ஆனால் பெண்ணானவள் விட்டுக்கொடுத்து சகிப்புத் தன்மையுடன் இருக்கும் போது இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காணலாம்
குடும்பத்தின் தலைவி குழந்தைகளிடம் அன்புடன் இருக்க வேண்டும். அன்பை மட்டும் செலுத்தினால் போதாது. அன்பு கலந்த கண்டிப்புடன் நடத்தினால்தான் குழந்தைகள் ஒழுக்கமுள்ள குழந்தைகளாக வளரும் முக்கியமாக ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல், குழந்தைகளை பொறுப்புடன் சம உரிமையுடன் நடத்தவேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024