இல்லத்தரசிகளே.. கிச்சன் வேலை சீக்கிரமா முடிய இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

kitchen tips (1)

சென்னை –கிச்சன் வேலைகளை எளிதாகவும் சுவையாகவும் முடிக்க சூப்பரான டிப்ஸ்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்..

முட்டை உடையாமல் இருக்க முட்டையை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிறகு உப்பு சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.அதேபோல் முட்டை கெடாமல் இருக்க அதன் நுனி பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைக்கவும்

குக்கரில் சாதம் உதிரியாக வர அரிசி ஊற வைக்கும்போது குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் அல்லது ஊற வைக்கும்  தண்ணீரில் ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்தால் குக்கர் சாதம் உதிரியாக இருப்பதோடு  மட்டுமல்லாமல் அடிப்பிடிக்காமலும்  இருக்கும்.

புது பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கரை நீக்க பாத்திரத்தை சூடாக்கி பிறகு அந்த ஸ்டிக்கரை ஒரு கத்தியால் எடுத்தால் முழுவதுமாக நீங்கிவிடும்.

தயிர் கெட்டியாக வர பாலை நன்கு காய்ச்சி பால் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு ஒரு கப் பாலிற்கு ஒரு ஸ்பூன் தயிர் என்ற விகிதத்தில் கலந்து ஆறு மணி நேரம் வைத்து விடவும் .பிறகு கெட்டியான தயிர் கிடைத்து விடும்.

குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது பொங்காமல் இருக்க பருப்பை குக்கரில் சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு குக்கர் மூடியின்  உட்புறத்தில் லேசாக எண்ணெய்  தடவி பிறகு மூடி போட்டால் பருப்பு மேலே வராது.

ரவையில் புழு வைக்காமல்  இருக்க ரவையை சூடான பாத்திரத்தில் இரண்டு நிமிடம் வறுத்து பிறகு சேமித்து வைக்கவும்.

அதேபோல் சாம்பார் சுவையாக வர பருப்பை வறுத்து விட்டு குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ஒரு காற்று புகாத டப்பாவில் வெள்ளை பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து பிறகு அதன் மீது மிளகாயின் காம்புகளை நீக்கி சேமித்து வைக்கவும்.

கேரட் அழுகிவிடாமல் இருக்க அதன் அடிப்பகுதி மற்றும் நுனிப்பகுதியை நறுக்கி சேமித்து வைக்க வேண்டும்.அதேபோல்  பாகற்காய் பழுக்காமல் நீண்ட நாட்கள் இருக்க அதனை நறுக்கி விதைகளை நீக்கி சேமித்து வைக்கவும்.

சர்க்கரை மற்றும் நாட்டு சக்கரையில் எறும்பு வராமல் இருக்க அதை சேகரித்து வைக்கும் மூடியில் ஏதேனும் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து பிறகு மூடி போட்டு வைக்கவும்.இதுபோன்ற எளிமையான  குறிப்புகளை உங்கள் கிச்சனில் பயன்படுத்தி பயன்பெறுங்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்