Homemade Soup : ‘பக்கவிளைவுகள் இல்லை’ – இனிமே வீட்டிலேயே சோப் செய்யலாம்..!
நாம் தினமும் நமது வீடுகளில் சருமத்தை சுத்தம் செய்ய சோப்பு உபயோகிப்பது உண்டு. இந்த சோப்பில் பல பிராண்டுகள் உள்ளது. ஒவ்வொருவரும் நாம் நமக்கு பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் கடைகளில் சோப் வாங்கி பயன்படுத்துவதைவிட வீட்டிலேயே எந்த ஹெமிக்கலும் பயன்படுத்தாத சோப்பை செய்யலாம்.
இவ்வாறு நாம் கெமிக்கல் இல்லாத சோப்பை பயன்படுத்துவதால், நமது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
தேவையானவை
- பச்சை அரிசி மாவு – 4 ஸ்பூன்
- கற்றாழை மடல் – ஒன்று
- உருளைக்கிழங்கு – ஒன்று
- ஸ்வீட் ஆல்மண்ட் ஆயில் – கால் டீஸ்பூன்
- சோப் பேஸ் – சிறிய துண்டு
- சிலிக்கான் சோப் மேக்கர்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கற்றாழையை தோலுரித்து அதில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை தோல் உரித்து துண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு அரைத்து, அரைத்த கலவையை நன்கு வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சோப் பேஸை நாம் எத்தனை சோப்பு செய்யப் போகிறோமோ அதற்கு ஏற்றவாறு வெட்டி எடுத்துக்கொண்டு அதனையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொதிக்க வைத்து அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, சோப் பேஸை அதனுள் போட்டு அது உருகும் வரை வைத்திருக்க வேண்டும். அது உருகிய பின் அதன் உள்ளேயே கற்றாழை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எடுத்த சாறு பின்பு ஸ்வீட் ஆல்மெண்ட் ஆயில், பச்சரிசி மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அது சற்று கெட்டியான பதத்திற்கு வந்த பின்பு, சிலிக்கான் சோப் மேக்கரில் ஊற்றி, 7-8 மணி நேரம் அப்படியே அவனது அது கட்டியான பின் எடுத்து பயன்படுத்தலாம். இப்படி கெமிக்கல் இல்லாத சோப்பை பய்ன்படுத்துவதால், நமது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.