இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு தயாரிக்கும் முறை இதோ..!
இட்லிக்கு அரிசி ஊற வைத்து அரைக்காமலே இன்ஸ்டண்டாக இட்லி மாவு தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்வோம்.
சென்னை- இட்லிக்கு அரிசி ஊற வைத்து அரைக்காமலே இன்ஸ்டண்டாக இட்லி மாவு தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- உளுந்து= ஒரு கப்[ 250 கிராம் அளவு ]
- அவல் = அரை கப்
- வெந்தயம் =ஒரு ஸ்பூன்
- பச்சரிசி மாவு= மூன்று ஸ்பூன்
செய்முறை;
உளுந்து மற்றும் அவலை ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். உளுந்து சிவந்து விடக்கூடாது. உளுந்து சூடேறினாலே போதுமானது. இப்போது அவற்றை ஆறவைத்து வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மாவுடன் பச்சரிசி மாவு மூன்று கப் அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு தேவையான அளவு மாவை எடுத்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு கரைத்த மாவை ஒரு குக்கரில் சேர்த்து மூடி போட்டு நான்கு மணி நேரம் புளிக்க வைத்து விடவும். சாதாரண பாத்திரத்தில் வைத்தால் புளிப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகும். குக்கரில் வைக்கும் போது நான்கு மணி நேரத்திலேயே மாவு புளித்து விடும். இப்போது அந்தப் புளித்த மாவில் உப்பு சேர்த்து கொண்டு இட்லி அல்லது தோசை ஊற்றினால் பஞ்சு போன்ற இட்லியும் மொறுமொறுப்பான தோசையும் தயாராகிவிடும். உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு வரவேண்டும் என்றால் பொருட்களின் அளவுகளை கூட்டி மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது தயார் செய்து சாப்பிடலாம் .