சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இதோ.!

Published by
K Palaniammal

திணை கிச்சடி – சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை  அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • தினை அரிசி= ஒரு டம்ளர்
  • இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =3
  • வெங்காயம் =இரண்டு
  • கேரட் பீன்ஸ் =அரை கப்
  • காலிபிளவர் =1 கப்
  • தக்காளி= இரண்டு
  • எண்ணெய் =3 ஸ்பூன்
  • சோம்பு= அரை ஸ்பூன்
  • கிராம்பு= 2
  • மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்

foxtail millet (1)

செய்முறை:

முதலில் திணையை ஐந்து முறை கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு, கிராம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து மைய வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் காலிபிளவர் சேர்த்துக் கொள்ளவும் .

இப்போது  சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு டம்ளர் தினை அரிசிக்கு மூன்று அரை  டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இப்போது திணை அரிசியையும் சேர்த்து கலந்து உப்பு சரிபார்த்து  மூன்றிலிருந்து நான்கு விசில் வரை விட்டு இறக்கினால் சத்தான திணை  அரிசி கிச்சடி தயாராகிவிடும். இதை சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

53 minutes ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

3 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

4 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

6 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

7 hours ago