சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இதோ.!
திணை கிச்சடி – சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்:
- தினை அரிசி= ஒரு டம்ளர்
- இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய் =3
- வெங்காயம் =இரண்டு
- கேரட் பீன்ஸ் =அரை கப்
- காலிபிளவர் =1 கப்
- தக்காளி= இரண்டு
- எண்ணெய் =3 ஸ்பூன்
- சோம்பு= அரை ஸ்பூன்
- கிராம்பு= 2
- மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்
செய்முறை:
முதலில் திணையை ஐந்து முறை கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு, கிராம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து மைய வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் காலிபிளவர் சேர்த்துக் கொள்ளவும் .
இப்போது சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு டம்ளர் தினை அரிசிக்கு மூன்று அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இப்போது திணை அரிசியையும் சேர்த்து கலந்து உப்பு சரிபார்த்து மூன்றிலிருந்து நான்கு விசில் வரை விட்டு இறக்கினால் சத்தான திணை அரிசி கிச்சடி தயாராகிவிடும். இதை சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.