பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதா.? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

stubborn child

இந்த உலகத்தில் நிறைய விஷயங்களை கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆனால் உலகத்தையே கற்றுக் கொடுப்பவர்கள் குழந்தைகள். ஆனால் சில குழந்தைகள் மிக பிடிவாதம் பிடிப்பார்கள்.  அந்த குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற, கீழே உள்ள சில குறிப்புகளை நாம் பின்பற்றுவோம்.

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கடமையாகும். உங்கள் குழந்தைகளுக்கு ஆறாவது விரலாக உங்கள் சுண்டு விரல் இருக்க வேண்டும். எத்தனையோ நண்பர்கள் உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முதலில் கூட இருப்பது கணவனோ, மனைவியோ, பெற்றோரோ அல்லது குழந்தைகளோ தான்.

லிக்விட் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான தீர்வு.!

குழந்தைகளுடன் இருக்கும் போது நீங்கள் குழந்தைகளாகவே மாறுங்கள் என பல ஆய்வுகளில் கூறுகின்றன. ஆனால் பெற்றோர்கள் உங்கள் வயதிற்கு ஏற்ப என்ன தோன்றுகிறதோ அதைத்தான் குழந்தைகளிடம் பேசுகிறீர்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஆவது குழந்தைகளாக மாறி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 100 முறை சிரிப்பார்கள்.

ஆனால் நாம் ஒரு நாளைக்கு நாலு முறை கூட சிரிப்பது கடினம். குழந்தைகளுக்கு முதலில் மற்றவர்களுக்கு கொடுக்கும் எண்ணத்தை கற்றுத் தர வேண்டும். தன்னிடம் இருக்கும் உணவு அல்லது வேறு ஏதேனும் பொருளோ மற்றவர்களுக்கு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த உலகமே கொடுக்கல் வாங்கல் முறையில் தான் சுழன்று வருகிறது.

குழந்தைகளை சின்ன சின்ன விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் கிளைகளை நம்பி இல்லாமல் தன் இறகுகளை நம்பி பறக்கத் தொடங்குவார்கள். குறிப்பாக உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் சேமித்த பணத்தை அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று பிடித்த பொருளை வாங்கி கொடுக்க வேண்டும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லையா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணுங்க..

அப்போது அவர்கள் அந்த பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் சிக்கனத்தை கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு சொத்துக்களை சேமித்து வைப்பதை விட இந்த மாதிரி நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு எட்டு முறையாவது பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை தொட்டு கட்டி அனைத்தும் பேச வேண்டும்.

காலை நேரங்களில் அவர்களை எழுப்பும் போது மெதுவாகவும் அமைதியாக அரவணைப்புடன் எழுப்ப வேண்டும். தூங்கச் செல்லும் முன் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். மற்றவர்களிடம் நல்ல செயல்களைக் கற்றுக்  கொள்ள சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இங்கு மற்றவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். நமக்கு அனைத்தையும் கற்று கொடுத்தது மற்றவர்கள் தானே.

இந்த உலகில் உள்ள அனைத்து மரங்களுமே புல்லாங்குழலாக மாறி விடுவதில்லை ஒரு சில மரங்கள் ஜன்னலாகவும், மேசையாகவும், நாற்காலியாகவோ அல்லது கதவுகளாகவோ நமக்கு பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை அறிந்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் நீங்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter