அதிகமாக சிந்திப்பீர்களா.? இந்த டிப்ஸ் உங்களுக்கானது…

Overthinking

வாழ்க்கை முறை : அதீத சிந்தனை (Overthinking) என்பது இந்த நவீன காலத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நமது முந்தைய தலைமுறைக்கு செய்தித்தாள்களையும், தொலைக்காட்சியையும் தண்டி பெரும்பாலும் அவர்கள் சித்திப்பதில்லை. அதனால் அடுத்து என்ன என்ற நோக்கத்தோடு அன்றைய தினம் செய்ய வேண்டியதை திட்டமிட்டு சலனமின்றி செய்து முடிப்பர்.

ஆனால், தற்போதைய இணைய (இளைய) தலைமுறை கையடக்க கணிப்பொறியாக ஸ்மார்ட் போன் கொண்டு நமது வாழ்வுக்கு தேவையில்லாத விஷயங்களை கூட தெரிந்து கொண்டு அதனை பற்றி அதிகமாக சிந்தித்து, அன்றைய நாளில் செய்ய வேண்டியதை செய்ய தவறவிட்டு விடுகின்றனர். அப்படியான அதீத சிந்தனையை (Overthinking) தவிர்க்க சில எளிய முறைகளைபற்றி இதில், தெரிந்து கொள்ளலாம்.

ஆழமாக சிந்தியுங்கள்…

தலைப்பை கேட்டவுடன் மீண்டும் அதிகமாக சிந்திக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். எளிதாக நாம் இப்போது சிந்திப்பது நமது வாழ்வுக்கு தேவையான ஒன்று தானா என யோசிக்க வேண்டும். நம்மால், நாம் சிந்திக்கும் விஷயத்தை செயல்படுத்த முடியுமா என பாகுப்பாய்வு செய்ய வேண்டும். இது தேவையில்லாத ஒன்றாக இருந்தாலோ, நம்மால் இதனை (இயற்கை) கட்டுப்படுத்த முடியாது என்றாலோ அதனை நினைப்பதை தவிர்க்க வேண்டும்.

தீர்வுக்கான கேள்விகள்…

ஒரு தவறு நடந்துவிட்டால் , ஏன் இந்த தவறு என்பதை பற்றியோ, எப்படி இந்த தவறு நடந்தது என்பதை பற்றியோ ஆழமாக யோசிக்காமல், இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எப்படியும் நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், நடக்கப்போவதை நம்மால் மாற்ற முடியும். இயற்கையின் காரணமாக ஏதேனும் நிகழ்ந்தால், ஏன் என்ற கேள்வியே வேண்டாம். அடுத்து என்ன என்று மட்டுமே சிந்திக்க துவங்குங்கள்.

நல்லது – கெட்டது:

நீங்கள் திட்டமிட்ட செயலை செய்ய போகிறீர்கள் என்றால், அதனால் ஏற்படும் நல்லது என்ன என்று மட்டும் யோசிக்காமல், அதனால் நிகழும் அதிகபட்ச கெட்டது என்ன என்று யோசித்து அதற்கு நீங்கள் தயாராக இருக்கும்படி உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்தால், ஒருவேளை கெட்டது நடந்தால் நீங்கள் அதிகமாக சிந்திக்க மாட்டீர்கள்.

நீண்ட கால யோசனை வேண்டாம்…

உங்கள் வாழ்வில் மிக பெரிய லட்சியம் இருக்கும். அதனை தினந்தோறும் யோசித்து இன்று எப்படி அதனை நினைத்தால் நாளை அது நடக்கப்போவது இல்லை. அதனை புரிந்துகொண்டு. அதற்கான பாதையை திட்டமிடுங்கள். அதற்கான தினசரி நடவடிக்கையை பட்டியலிடுங்கள். அன்றைய தினம் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் சிந்தியுங்கள். அதனை செயல்படுத்த தொடங்குங்கள்.

உடல் இருக்கும் இடத்தில் மனம் :

என்றுமே நமது உடல் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நமது மனமும் இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் எதையோ சிந்திப்பது வேறு.  ஆனால், நாம் வேலை செய்யும் இடத்தில் அவ்வாறு செய்வது நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லாது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்குதான் மனம் இருக்க வேண்டும்.

நினைவாற்றல் அதிகப்படுத்த வேண்டும்:

உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்த பயிற்சி மேற்கொள்ளுங்கள். அவ்வாறு நினைவாற்றலை அதிகப்படுத்தி அதிமாக புத்தகம் படிக்கச் துவங்குவதோ, அல்லது புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள துவங்குங்கள். அது உங்கள் அதீத சிந்தனையை தவிர்க்கும்.

செயலை மாற்றுங்கள் :

அதீத சிந்தனை தோன்றினால், அதனை நினைக்க கூடாது என நினைத்து அதனை இன்னும் ஆழமாக சிந்திக்க சென்று விடுவீர்கள். அப்படியான சமயத்தில் அதீத சிந்தனையை தவிர்க்க வேறு செயலை செய்ய வேண்டும். உடனடியாக உடற்பயிற்சி செய்வதோ, வேறு ஏதேனும் நமக்கு பிடித்ததை செய்வதையோ தொடர வேண்டும்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் நமது அதீத சிந்தனை எனும் எண்ண ஓட்டத்தை குறைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்