உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!

Published by
K Palaniammal

Soft Hand-நம்மில் பலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை அதனால் எளிதாகவே கைகள் அதிக சுருக்கமாகவும் ,கடினமான தோலையும் விரைவில் ஏற்படுத்தி விடும். இவற்றை சரி செய்ய எளிமையான வீட்டுக் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.

உங்கள் கைகள் மென்மையாக மாற குறிப்புகள்:

எலுமிச்சை சாறில் சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் இவற்றை கலந்து கைகளில் மசாஜ் செய்யவும் இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பிறகு கைகளில் விளக்கெண்ணெய் மற்றும் முகத்தில் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு கிரீம் இவற்றை நன்கு கலந்து கைகளில் பூசி வரவும். இவ்வாறு தொடர்ந்து நாம் செய்து வந்தால்  கரடு முரடான கைகள் கூட விரைவில் மென்மையானதாக மாறும்.

கைகளில் சுருக்கம் நீங்க குறிப்புகள்:

  • பலருக்கும் சிறிய வயதிலேயே கைகளில் அதிகச்சுருக்கம் காணப்படும்,  கைகளை நாம் பராமரிக்காமல் விட்டால் முகத்தை விட   எளிதில் சுருக்கம் ஏற்படும்.
  • தக்காளி, வாழைப்பழம், அண்ணாச்சி பழம், தர்பூசணி இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு நாளும் கைகளில் மசாஜ் செய்து வரவும்.
  • தக்காளி மற்றும் அண்ணாச்சி  இறந்த செல்களை நீக்கிவிடும் .தர்பூசணி,வாழைப்பழம்  தோல் வறட்சி ஆகாமல் பாதுகாக்கும் .

கைகள் வறட்சி  அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு தினமும் இரவில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெயை  கைகளில் தடவிக் கொள்ளவும். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நம் உடலில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கைகளில் வறட்சி ஏற்படும்.

எனவே இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் கரடு முரடான கைகள் கூட மென்மையாகி விடும் .

Recent Posts

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

5 mins ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

11 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

12 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

12 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

13 hours ago

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர்…

14 hours ago