உதட்டை அழகாக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!
இன்றைய இளம் தலைமுறையினர், முகத்தை அழகூட்டுவது மட்டுமல்லாமல், உதட்டையும் அழகூட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் எவ்வாறு உதட்டை அழகூட்டுவது என்பது பற்றி பார்ப்போம்.
உதட்டில் உள்ள பரு மறைய
சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது, உதட்டிலும் பரு ஏற்படுவது வழக்கம். இந்த பருவை போக்க, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில பூசி வந்தால், உதட்டில் உள்ள பருக்கள் மறையும்.
உதடு சிவப்பாக
உதடு சிவப்பாக வேண்டும் என அனைவருமே விரும்புவதுண்டு. எனவே உதடு சிவப்பாக விரும்புபவர்கள், பீட்ரூட் அல்லது மாதுளம் பழ சாற்றினை அடிக்கடி உதட்டை பூசி வந்தால், உதடு சிவப்பாக மாறும்.
உதடு வெடிப்பு
சிலருக்கு அடிக்கடி உதட்டில் வெடிப்பு ஏற்படுவதுண்டு. இந்த பிரச்னை உள்ளவர்கள், கரும்பு சக்கையை சாம்பலாக்கி அந்த தூளில் வெண்ணெய் கலந்து வெடிப்பில் பூசி வந்தால், உதடு வெடிப்பு நீங்கும்.