முன்பெல்லாம் மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும். ஆனால் தற்போது மார்ச் மாதத்தின் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலில் செல்லக்கூடிய நமது முகம் மற்றும் உடல் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. நாம் வெண்மை நிறமாக இருந்தாலும் வெயிலின் மூலமாக முகம் கருமை நிறத்தை அடைகிறது. இந்த கருமை நிறத்தை போக்குவதற்கான சில இயற்கையான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முட்டைகோஸ் என்ன உதவப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் முட்டைக்கோஸ் இலைகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் அதை நமது சருமத்தில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்து வரும் பொழுது உடலின் சூரியனால் ஏற்பட்ட கருமை நீங்கி அழகிய சருமம் பெறலாம்.
தயிரில் மிகவும் குளிர்ச்சியான தன்மைகளை உண்டுபண்ணக் கூடிய பல சத்துகள் உள்ளது. வெயில் உடலில் படக்கூடிய கை,கால் மற்றும் முகத்தில் தயிரை தடவி விட்டு 10 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும் அல்லது ஈரத் துணியால் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை சருமத்தில் உள்ள மெலனின் அளவை கட்டுப்படுத்தி சூரியனின் வெயிலில் இருந்து பாதுகாப்பதுடன் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி மற்றும் புண் ஆகியவற்றையும் தடுக்க உதவுகிறது. எனவே கற்றாழை சாறு எடுத்து அல்லது கற்றாழையை சீப்பு கொண்டு தேய்த்து அந்த ஜெல்லை எடுத்து நமது உடலில் தடவினாலும் வெயில் கருமை நீங்கும். மேலும் சுரைக்காய் சாறு மூலமாகவும் வெயிலின் கருமை நீங்கும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தடவி 5 நிமிடம் ஊற வைத்து கழுவி விட்டுப் பார்த்தால் நமது உடலில் கண்கூடான மாற்றத்தை காணலாம்.
இது நமது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. ஒரு டேபிள்ஸ்பூன் சிவப்பு மைசூர் பருப்பை ஊறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் சம அளவு தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 30 அல்லது 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவி எடுக்க நமது சருமத்தில் காணப்படும் வெயிலின் கருமை நிறம் மாறி நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…