வெயிலால் ஏற்படும் முக கருமை நீங்க சில இயற்கை வழிமுறைகள் இதோ!

Veyil_ [file image]

முன்பெல்லாம் மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும். ஆனால் தற்போது மார்ச் மாதத்தின் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலில் செல்லக்கூடிய நமது முகம் மற்றும் உடல் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. நாம் வெண்மை நிறமாக இருந்தாலும் வெயிலின் மூலமாக முகம் கருமை நிறத்தை அடைகிறது. இந்த கருமை நிறத்தை போக்குவதற்கான சில இயற்கையான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முட்டைக்கோஸ்

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முட்டைகோஸ் என்ன உதவப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் முட்டைக்கோஸ் இலைகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் அதை நமது சருமத்தில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்து வரும் பொழுது உடலின் சூரியனால் ஏற்பட்ட கருமை நீங்கி அழகிய சருமம் பெறலாம்.

தயிர்

தயிரில் மிகவும் குளிர்ச்சியான தன்மைகளை உண்டுபண்ணக் கூடிய பல சத்துகள் உள்ளது. வெயில் உடலில் படக்கூடிய கை,கால் மற்றும் முகத்தில் தயிரை தடவி விட்டு 10 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும் அல்லது ஈரத் துணியால் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை, சுரைக்காய் சாறு

கற்றாழை சருமத்தில் உள்ள மெலனின் அளவை கட்டுப்படுத்தி சூரியனின் வெயிலில் இருந்து பாதுகாப்பதுடன் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி மற்றும் புண்  ஆகியவற்றையும் தடுக்க உதவுகிறது. எனவே கற்றாழை சாறு எடுத்து அல்லது  கற்றாழையை சீப்பு கொண்டு தேய்த்து அந்த ஜெல்லை எடுத்து நமது உடலில் தடவினாலும் வெயில் கருமை நீங்கும். மேலும் சுரைக்காய் சாறு மூலமாகவும் வெயிலின் கருமை நீங்கும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தடவி 5 நிமிடம் ஊற வைத்து கழுவி விட்டுப் பார்த்தால் நமது உடலில் கண்கூடான மாற்றத்தை காணலாம்.

சிவப்பு மைசூர் பருப்பு

இது நமது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. ஒரு டேபிள்ஸ்பூன் சிவப்பு மைசூர் பருப்பை ஊறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் சம அளவு தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 30 அல்லது 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவி எடுக்க நமது சருமத்தில் காணப்படும் வெயிலின் கருமை நிறம் மாறி நல்ல பலன் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்