முக அழகை கெடுக்கும், முகக்குழிகளை போக்க சில சிறந்த வழிகள்!
இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் முக அழகை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிலர் செயற்கையான மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு இயற்கையான முறைகளில் போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.
வெள்ளரிக்காய்
தேவையானவை
- வெள்ளரிக்காய்
- ரோஸ்வட்டர்
செய்முறை
வெள்ளரிக்காயை துருவி அதனுடன், ரோசவாட்டரை கலந்து முகத்தில் பூச்சி வேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள குழிகள் மறைந்து முகம் பளபளப்பாக காணப்படும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து முகத்தில் பூச்சி, அது நன்கு காய்ந்த பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் உள்ள குழிகள் மறைந்து விடும்.
பப்பாளி
பப்பாளி முக ஆகை மெருகூட்டுவதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. பப்பாளியை நன்கு அரைத்து, முகத்தில் பூசி, அது நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள குழிகள் மறைந்து முகம் பளப்பாக மாறி விடும்.
கடலைமாவு
தேவையானவை
- கடலைமாவு
- எலுமிச்சைசாறு
கடலைமாவில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அந்த கலவை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், கழுவினால் முகத்தில் உள்ள குழிகள் மறைந்து பளபளப்பாகும்.