Summer tips for hair-வெயில் காலத்தில் உங்கள் முடியை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் காணலாம்.
பொதுவாக நாம் முக அழகிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு முடிக்கும் கொடுப்போம். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் முடி உதிர்வு நிற்காது ,அதுவும் இந்த வெயில் காலத்தில் அதிக முடி உதிர்வு ஏற்படும்.
இரவு தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்த பின்பும் உங்கள் தலைப்பகுதியை மட்டும் கீழ் நோக்கி தொங்க விடவும். இவ்வாறு செய்யும்போது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் மூலம் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
ஓய்வு நேரங்களில் உங்கள் இரு கைகளில் உள்ள நகங்களை ஒன்றாக்கி உரச செய்யவும். இதன் மூலம் முடியின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராக்கப்படும்.
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளில் நெல்லிக்காய், பாதாம், சீயக்காய், கரிசலாங்கண்ணி போன்ற இயற்கையான மூலப் பொருட்கள் உள்ளதா என பார்த்து வாங்கி பயன்படுத்தவும். முடிந்தவரை அதிக ரசாயனம் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்தவும்.
முருங்கைக் கீரை பொடி மற்றும் கருவேப்பிலை பொடியை ஒன்றாக கலந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை அல்லது மதிய வேளையில் குடித்துவிட்டு ஒரு டம்ளர் மோர் எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்யவும். இப்படி செய்யும்போது முடி உதிர்வு குறைந்து புதிய முடிகளை வளரச் செய்யும்.
தலைக்கு குளித்து முடித்த பிறகு பெரும்பாலானோர் கண்டிஷனர்களை பயன்படுத்துகின்றனர். இந்த கண்டிஷனர் முடிகளுக்கு ஒரு மென்மை தன்மையை தரும்.
இதை பயன்படுத்தும் போது முடியில் தண்ணீர் சொட்ட கூடாது. முடியில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து பிறகு கண்டிஷனர் பயன்படுத்தவும். முடிந்தவரை இயற்கையான கண்டிஷனை வீட்டிலே தயாரித்து பயன்படுத்துவது நல்லது.
உங்கள் முடிக்கு தகுந்தார் போல் தண்ணீர் எடுத்து கொள்ளவும் ,அதில் விட்டமின் இ கேப்சூல் இரண்டு சொட்டு, தேங்காய் எண்ணெய் இரண்டு சொட்டு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் இவற்றை கலந்து உங்கள் முடிகளுக்கு கண்டிஷனராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது ஹேர் பேக் பயன்படுத்த வேண்டும். ஊற வைத்த வெந்தயம், செம்பருத்தி இலைகள், கருவேப்பிலை, முட்டை, தயிர் இவற்றில் எது கிடைக்கிறதோ அதை குளிப்பதற்கு முன்பு அரை மணி நேரம் தேய்த்து ஊற வைத்து பிறகு கழுவி வரவும். இது உங்கள் முடிக்கு ஊட்டமளிக்கும்.
எளிமையான முறையில் அனைவருக்குமே கிடைக்கக்கூடியது முட்டை மற்றும் தயிர் இவற்றை கலந்து முடிகளுக்கு ஹேர் பேக் ஆக பயன்படுத்தலாம், இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.
ஆகவே மேற்கூறியது போல் தொடர்ந்து செய்து வரும்போது முடி உதிர்வு குறைந்து முடி வளர தொடங்கி விடும். இவற்றை குறைந்தது ஆறு மாதங்கள் பின்பற்றினால் அதன் பலன்களை பெறலாம் .
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…