உங்கள் கண்களை மெட்ராஸ் ஐ லிருந்து பாதுகாக்க… சூப்பரான டிப்ஸ் இதோ!

Pink eye

மழைக்காலங்கள் வந்துவிட்டால் பல தொற்றுகள் பரவி வரும். அதிலும் குறிப்பாக இந்த மெட்ராஸ் ஐ.இது பெரும்பாலும் குழந்தைகளையும் வயதானவர்களையும் அதிகம் பாதிக்கிறது. மெட்ராஸ் ஐ எதனால் வருகிறது மற்றும் எப்படி இதிலிருந்து நாம் பாதுகாப்பது, வந்துவிட்டால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் வாசிப்போம்..

அறிகுறிகள்:
கண்ணில் நீர் வடிதல் அதிகமான கண் சிவப்பு, கண் வலி கண் உறுத்தல் வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசுவது மற்றும் கண்களை திறக்க முடியாத அளவுக்கு நிறைய கண்பூளை படிவது.

காரணங்கள்:
இது பாக்டீரியா மற்றும் வைரஸால் பரவக்கூடிய ஒரு தொற்று ஆகும். குறிப்பாக இது சளியை ஏற்படுத்தக்கூடிய அடினோ வைரஸ் மூலம் பரவும்.

காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் மூலம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் கண்ணீரின் மூலமும் பரவும். ஒரு சொட்டு கண்ணீரில் 10 கோடி வைரஸ்கள் உள்ளன. மேலும் தொடுவதன் மூலமும் பரவும்.

* கண்ணின் மேற்புறம் மட்டுமே பாதிக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை.

* இது குணமாக 7 லிருந்து 14 நாட்கள் ஆகும்.

மெட்ராஸ் செய்யால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை :

கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கண்களை கழுவ வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தியவற்றை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனிமையில் இருப்பது சிறந்ததாகும். கண் மருந்துகள் பயன்படுத்தும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது சிறந்ததாகும். ஒருவர் பயன்படுத்திய சொத்து மருந்தை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

*ஆரம்ப நிலையில் இருக்கும் போதே கற்றாழையை சிறு துண்டுகளாக்கி இரண்டாகப் பிரித்து கண்களை மூடிக்கொண்டு கற்றாழையை கண்கள் மேல் வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். இவ்வாறு காலை மற்றும் இரவு வேலைகளில் செய்து வந்தால் ஒரே நாளில் குணமாகும். ஒன்றிலிருந்து 2 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். அதாவது ஆரம்ப நிலையில் இருக்கும் போதே செய்ய வேண்டும்.

உணவு முறை :

வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு கொய்யா, கருப்பு திராட்சை,பப்பாளி பழம், கேரட் போன்றவைகளும் தர்பூசணி,சுரக்காய் புடலங்காய் பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க காய்களையும் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

* காரம் நிறைந்த உணவுகள் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இது ஒரு காட்டுத்தீயாக பரவக்கூடிய தொற்று ஆகும். எனவே மக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியமாகும்.

கண்களை பாதுகாக்க விளக்கெண்ணையை கண் மை போடும் இடத்தில் தடவி வந்தால் கண்ணில் ஈர பதத்திற்கு நல்லது மற்றும் கண் வறட்சி கருவளையம் வராமல் பாதுகாக்கும். வருமுன் காப்பதே சிறந்ததாகும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்