வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

heat boils

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம்.

சூட்டு கொப்புளம் வர காரணங்கள் :

குளிர்காலத்தில் எப்படி சில பாக்டீரியாக்களால் தாக்கம் ஏற்படுகிறதோ அது போல் வெயில் காலத்திலும் சில பாக்டீரியாக்கள் தாக்கத்தை ஏற்படுகிறது. ஸ்டேபெல்லோ காக்கஸ்  என்ற பாக்டீரியாவின் மூலம் தான் சூட்டு கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதை வேனல் கட்டி என்றும் கூறுவார்கள்.

இது பெரும்பாலும் தசை பகுதியில் இடுக்குகளில் வரும். அக்குள், ஆசன வாய், கை இடுக்குகள், முகம் போன்ற இடத்தில் வலியுடன் காணப்படும். இது ஏன் வெயில் காலத்தில் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .

மேலும் அரிப்பு தொந்தரவும் ஏற்படும். இந்த சூழ்நிலை தான் அந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக இந்த வேனல் கட்டி தளர்ந்த செல்கள் உள்ள இடத்தில் வரும். ஒரு சிலருக்கு இந்த கட்டிகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.

சூட்டு கொப்பளங்களை சரி செய்யும் குறிப்புகள்:

உள் மருந்தாக அருகம்புல் சரை தொடர்ந்து 14 நாட்கள் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் குடித்து வரவேண்டும். பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் 20ml   5 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்5 ml  எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் குறிப்பாக அருகம்புல்சரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும் மேலும் பாக்டீரியாக்களை அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டது.

வெளி பூச்சு:

வேப்ப எண்ணெய் ,விளக்க எண்ணெய், மஞ்சள் மூன்றையும் கலந்து கொப்புளம் உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வர வேண்டும். அல்லது ஒரு துணியில் நனைத்து கட்டி உள்ள இடத்தில் வைத்து விடவும்.

மேலும் இதில் உள்ள சீல் மற்ற இடங்களில் படும்போது கட்டிகள் வர வாய்ப்புள்ளது அதனால் சுத்தம் செய்யும்போது கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

வேப்ப இலையும் மஞ்சளையும் அரைத்து கட்டி உள்ள இடத்தில் மேல் பூச்சாக போட்டால் விரைவில் கட்டிகள் உடைந்து விடும். மேலும் கட்டி உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லையும் தடவி வரலாம்.

செய்யக்கூடாதவைகள்:

இந்த சூட்டு கொப்பளங்கள் இருக்கும் போது அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் .மேலும் ஐஸ் கட்டிகள் வைக்க கூடாது.

எனவே இந்த கோடை காலத்தில் வேனல் கட்டி வந்தால் இந்த முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்