வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குருவை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!
வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம்.
வேர்க்குரு :
வேர்க்குரு ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம்.
இந்த வேர்க்குரு நெற்றி, முதுகு , கழுத்துப்பகுதி, கை, கால்களில் அதிகமாக காணப்படும் ,மேலும் அரிப்பையும் ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த வியர்வையில் உப்பு சத்தும் இருப்பதால் அரிப்பு உண்டாகிறது.
வேர்க்குருவை சரி செய்யும் குறிப்புகள்:
சந்தனத்தை ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீரில் கலந்து வேர்க்குருவில் பூசவும்.
தயிரை வேர்க்குரு உள்ள இடங்களில் பூசி வரலாம் அல்லது தயிரை உடல் முழுவதும் தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.
வேப்பிலையும், மஞ்சளையும் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர அரிப்பு நீங்கி வேர்க்குரு குறையும் .மேலும் முகப்பருக்களும் குறையும்.
பண நுங்கின் நீர் மற்றும் தோலை வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்து விட்டு அப்படியே விட்டு விடவும் ,இது வேர்க்குருவால் ஏற்படும் அரிப்பை குறைக்கும்.
இளநீரை ஒரு துணியில் நனைத்து வேர்க்குரு பகுதியில் அடிக்கடி தடவி விடவும்.
கற்றாழை ஜெல்லை நன்கு கழுவி வேர்குரின் மீது தடவினால் வேர்க்குரு விரைவில் குறையும் .குறிப்பாக கற்றாழை ஜெல்லை கழுவி விட்டு தான் பயன்படுத்த வேண்டும் இல்லை எனில் அரிப்பை ஏற்படுத்தும்.
வேர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?
கோடை காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், நீர் சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரி, மாதுளை,ஆரஞ்சு, சுரக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ,நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தயிர், மோர் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உங்கள் உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது தர்பூசணி சாரை உடலில் தடவி குளிக்க வைக்கலாம். வெள்ளரிக்காயின் சாறையும் பூசி குளிக்க வைக்கலாம்.
எனவே கோடை காலத்தில் உங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.