அடடே.. மாங்காயை வைத்து சட்னி கூட செய்யலாமாம்.!

Published by
K Palaniammal

Mango recipe-மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவூரும்  என்று தான் சொல்லணும். அதனால்தான் முக்கனிகளில் முதல் கனி மாங்காயை வைத்துள்ளார்கள் . இந்த மாங்காயை  வைத்து நாம் பச்சடி, சாலட் ,குழம்பு போன்ற வகைகளில் செய்து  ருசித்திருப்போம், இன்று மாங்காயை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

  • பச்சை மாங்காய் =1 பெரியது
  • வெந்தயம் =1/2 ஸ்பூன்
  • கடலை பருப்பு =2  ஸ்பூன்
  • துவரம் பருப்பு =2 ஸ்பூன்
  • வரமிளகாய் =7-8
  • எண்ணெய் =4 ஸ்பூன்
  • சின்னவெங்காயம் =20
  • பூண்டு =10பள்ளு
  • துருவிய தேங்காய் =10 ஸ்பூன்
  • வெல்லம் =1 ஸ்பூன்
  • கருவேப்பிலை= கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் கடலைப்பருப்பு ,துவரம் பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதிலே பூண்டு மற்றும் சின்ன வெங்காயம், வர மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு தேங்காயையும் சேர்க்கவும் .

பிறகு அது நன்கு ஆறியவுடன் வெல்லம் , மாங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து தாளிப்பு சேர்த்தால் சட்டென மாங்காய் சட்னி தயாராகிவிடும். இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும் ,சுவையாகவும் இருக்கும்,செஞ்சு அசத்துங்க..

பச்சை மாங்காயில் உள்ள நன்மைகள்:

  • பச்சை மாங்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் மிக மிக அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் டயட்ரி ஃபைபர் நிறைந்துள்ளது.
  • அசிடிட்டி ,நெஞ்சு கரிப்பு உள்ளவர்கள் மாங்காயை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் .
  • மாங்காயை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் பெறும்  கண்களுக்கும்  நன்மை அளிக்கும்.
  • உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.
  • மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடும் போது பல்  ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும், பல் ஈறுகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
  • சரும பொழிவை அதிகரிக்கும், முதுமையாவதை தள்ளி போடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

மாங்காய் உடல் சூடை அதிகரிக்கும் ,உடல் சூடு உள்ளவர்கள் தவிர்க்கவும் .2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும் .சிறுகுழந்தைகளுக்கு மாந்தத்தை  ஏற்படுத்தும் .

ஆகவே மாங்காய் கிடைக்கும் காலங்களில் தவறவிடாமல் சாப்பிட்டு அதன் மருத்துவ குணத்தை பெறுங்கள் .

 

Published by
K Palaniammal

Recent Posts

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

26 minutes ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

47 minutes ago

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

1 hour ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

2 hours ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 hours ago