டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் செயல்பாட்டை மிகச் சிறப்பாக பராமரிக்கிறது. 5 நாட்களுக்கு அதிக ஃபிளாவனால் கொக்கோவை சாப்பிடுவது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், கோகோவில் காஃபின் மற்றும் தியோப்ரோமைன் போன்ற தூண்டுதல்கள் இருக்கிறது. இதனால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணங்களில் இந்த டார்க் சாக்லேட்டும் ஒன்றாக இருக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு: உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். அதேசமயம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இதற்கு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லேட், உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
சாக்லேட்: டார்க் சாக்லேட் மிகவும் சத்தானது. இதில் நல்ல அளவு கரையக்கூடிய நார்ச்சத்துடன் கனிமங்களும் நிறைந்துள்ளன. மேலும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தோல்: டார்க் சாக்லேட்டில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் உங்கள் சருமத்திற்கும் சிறந்ததாக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் சருமத்தை மிகவும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…