முதுமையை விரட்டியடித்து இளமையை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவரா நீங்கள் ? அப்ப இதெல்லாம் சாப்பிடாதீங்க
- இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள்.
நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர்.
தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம்.
பால்பவுடர்
இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி மற்றும் டீ போடுகிறோம். ஆனால், நாம் பயன்படுத்தும் பால் பவுடரில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக உள்ளது.
இதன் மூலம் நமது உடலில் இரத்தக்குழாய்களில் கேட்ட கொழுப்புகள் படிந்து, அது இரத்த ஓட்டத்திற்கு தடையாக உள்ளது. இதனால் நமது உடலில் தளர்வு ஏற்பட்டு வயது முதிர்ந்தவர் போல காட்சியளிப்போம்.
பாப்கார்ன்
நம்மில் அதிகமானோர் பாப்கார்னை விரும்பி சாப்பிடுவதுண்டு. நாம் வெளியில் சுற்றுலா தலைகளுக்கு சென்றாலோ அல்லது திரையரங்குகளுக்கு சென்றாலோ பொழுதுபோக்கிற்காக நாம் விரும்பி சாப்பிடு நொறுக்கு தீனி பாப்கார்ன் தான்.
பாப்கார்ன் நமது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்க செய்து, நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது.
குளிர்பானங்கள்
கோடைகாலம் வந்துவிட்டாலே, நம்மில் அதிகமானோர் குளிர்ச்சியான பானங்களை தான் நாடுகிறோம். நாம் அருந்தும் செயற்கையான குளிர்பானங்கள் அனைத்திலுமே, பாஸ்பாரிக் அமிலம் கலக்கப்பட்டுள்ளது.
இது நமது இளமைக்கு அழகு சேர்க்கும் பற்களின் எனாமலை அரித்துவிடும். இதனால் செயற்கையான குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகள்
நம்மில் அதிகமானோருக்கு பொரித்த உணவுகள் என்றால் மிகவும் பிடித்தமானது தான். அந்த உணவுகளில் தான் அதிகமான சுவையும் உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று தான்.
ஆனால் நாம் பொரிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெய்களில், நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய கெட்ட கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இது நமது உடல் எடையை அதிகரிக்க செய்து, தொப்பை விழ செய்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இறைச்சி
இறைச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று தான். ஆனால், நாம் உண்ணும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி செரிமானம் ஆவதற்கு மிக அதிகமான நேரம் எடுக்கும்.
இந்த இறைச்சியை அதிகமாக வேலை செய்பவர்கள் சாப்பிட்டால் அது சீக்கிரமாக செரித்து விடும். இல்லை என்றால் நமது உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்க செய்து, முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது.