இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும்.
நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இன்று அதிகமானோர் மேலை நாட்டு உணவு பொருட்களையே வாங்கி விரும்பி உண்கிறோம்.
தற்போது இந்த பதிவில் பூசணிக்காயினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைப்பதில் பூசணிக்காய் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள, பிரதான பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்னை.
இந்த பிரச்சனையை போக்குவதற்கு பூசணிக்காய் தான் ஒரு சிறந்த தீர்வு. ஏனென்றால் பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது உடலில் தேங்கியுள்ள கேட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க செய்கிறது.
எந்த ஒரு நோய்களும் நம்மை எளிதில் தாக்காமல் இருக்க, நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பூசணிக்காயை நமது உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு, பூசணிக்காய் ஒரு சிறந்த உணவாகும். பூசணிக்காயில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கண் பார்வை பிரச்னை உள்ளவர்கள் தங்களது உணவில் தொடர்ந்து பூசணிக்காயை சேர்த்து வந்தால், கண் பார்வை பிரச்சனைகள் நீங்கி விடும்.
உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவதற்காக சிறந்த உணவாக பூசணிக்காய் கருதப்படுகிறது. பூசணிக்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிப்பதோடு, எலெக்ரோலைட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது.
கோடை காலத்தில் பூசணிக்காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றால் பூசணிக்காயில் உடல் சூட்டை தனிக்கக் கொடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இது சிறுநீரக வியாதிகளை குணமாக்கி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. .
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…