குழந்தை இல்லை என கவலையா? அப்போ இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும்..!

infertility

குழந்தையின்மை -தற்போதைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக அதிக பிரச்சனைகளில் குழந்தையின்மையும் ஒன்று.சில குடும்பத்தில் பிரச்சனைகள்  இதை முதற்காரணமாக கொண்டு ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு அலைகின்றனர், குழந்தை இன்மையை  சரி செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.

குழந்தையின்மைக்கு காரணம் :

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் கருப்பையில் ஏதேனும் தொந்தரவு இருப்பது ,தைராய்டு மற்றும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு இவற்றால் தான் குழந்தை பேரு தள்ளி போகிறது.

மலைவேம்பு:

ஒரு கைப்பிடி அளவு மலைவேம்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டையும் நைசாக அரைத்து பெண்களுக்கு மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சூரிய உதயத்திற்கு முன் குடிக்க வேண்டும் .இதை கணவன் மனைவி என இருவருமே குடிக்க வேண்டும்.

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு  அதாவது அவரவர்1 கையளவு எடுத்து தினமும் காலையில் அதை பச்சையாகவோ அல்லது எண்ணெயில் வதக்கியோ சாப்பிட வேண்டும் ஆனால் ஏதேனும் ஒரு முறையில் சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், தொடர்ந்து 48 நாட்கள் கணவன், மனைவி என இருவருமே சாப்பிட வேண்டும்.

விதையுள்ள பழங்கள் :

  • இரவில் செவ்வாழைப்பழம் இருவருமே எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் அதிக விதை உள்ள பழங்களான கொய்யா ,கருப்பு திராட்சை போன்றவற்றையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக அத்திக்காயை பெண்கள் மாதவிடாய் முடிந்த மறுநாள் காலையில் இரண்டு காயை மென்று சாப்பிட வேண்டும். நிச்சயமாக கணவன் மனைவி இருவருமே சாப்பிட வேண்டும்.

நவீன உலகில் குழந்தையின்மைக்கு பல மருத்துவங்கள் வந்துவிட்டாலும் இது அனைத்து தர மக்களுக்குமே கைக்கெட்டாதது  தான். ஆனால் இந்த குறிப்புகள் பயன்படுத்த அவ்வளவு பணம் தேவைப்படாது அனைவருமே முயற்சி செய்யலாம்.

எவ்வளவு முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை என்று மனம் தவறாமல் இந்த குறிப்புகளை கடைசியாக முயற்சி செய்து பாருங்கள் , நிச்சயம் உங்களுக்கு குழந்தை பேரு கிடைக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள்.

நமக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அதையும் நாம் புரிந்து கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்