சர்க்கரை நோய் இருக்கிறதா என சந்தேகமாக உள்ளதா? சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்!
இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கொன்றுவிடுகிறது.
தற்போது இந்த பதிவில் சர்க்கரை இருப்பவர்களின் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
உடல் எடை குறைதல்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து விடும். ஏனென்றால், நமது உடலில் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு திசுக்களை உடைத்து எடுத்து கொள்கிறது.
உடல்சோர்வு
சர்க்கரை நோயாளிகளால், தங்களது உடலுக்கு தேவையான சர்க்கரையை எடுத்துக் கொள்ள முடியாததால், உடல் சோர்வு மற்றும் அசதி ஏற்படுகிறது.
கைகள் மரத்து போதல்
சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால், கைகள் மரத்து போகிறது.
காயங்கள்
நமது உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் ஏதேனும் புண்கள் ஏற்பட்டால், அந்த புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். இதற்கு காரணம் நமது திசுக்களில் ஏற்படக் கூடிய சீரற்ற நீர் சமன்பாடு தான்.