ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆப்பிள் ஜாம் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?
நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் ஆப்பிளில் நிறைந்து காணப்படுகிறது. ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளை ஆப்பிள் சாப்பிட வைக்க இந்த ரெசிபியை செய்து கொடுங்கள்.அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆப்பிள் ஜாம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் -2
எலுமிச்சை பழம் -1/2 பழம்
தண்ணீர் -1/2 கப்
சர்க்கரை -1கப்
செய்முறை :
ஆப்பிளை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேறியதும் ஆப்பிள் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து ஆப்பிள் வெந்ததும் நன்கு மசித்து விட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும். பின்பு ஜாமை எடுத்து வலுக்கும் பதம் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும். ஜாம் பதம் வரவில்லை என்றால் அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும். பின்பு இறக்கி நன்றாக ஆறவிடவும்.இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் தயார்.