அகத்திக்கீரையில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்….!!!

Default Image

கீரை வகைகள் என்றாலே அனைத்து கீரைகளும் சத்துக்கள் நிறைந்ததாக தான் இருக்கும். அனைத்து வகையான கீரைகளும் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில், விலை மலிவாக கிடைக்க கூடியது.

கீரைகளில் பலவகையான கீரைகள் உள்ளது. அரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரை, அகத்திக்கீரை என நாம் சொல்லிக்கொண்டே போகலாம். கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. தற்போது நாம் இந்த பதிவில் அகத்திக்கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம்.

அகத்திக்கீரை

Related image

இந்த கீரை உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், பல வகையான வைட்டமின்கள் உள்ளது. அகத்தி கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.

குடல் புண்

இன்று அதிகமானோர் ஆதிக்கப்படும் நோய்களில் ஒன்று குடல் புண். சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பதால் குடல் புண் ஏற்படுகிறது. இந்த குடல் புண்ணை மாற்றுவதற்கு செயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றல் இயற்கையான முறையில் தீர்வு காணலாம்.

Image result for குடல் புண்

குடல் புண் உள்ளவர்கள் தினமும் தங்களது உணவில் அகத்தி கீரையை சேர்த்து கொண்டால் குடல்புண் விரைவில் குணமாகும்.

காய்ச்சல்

Image result for காய்ச்சல்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அகத்திக்கீரை சாற்றை 2 துளிகளை மூக்கில் விட்டால் காய்ச்சலில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் அகத்திக்கீரை சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை லேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும். ஜலதோஷம் மற்றும் சளி தொல்லை போன்றவை நீங்கும்.

கண்நோய்

Image result for கண்நோய்

கண்களில் பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை பயன்படுத்தினால் பூரண குணமடையலாம். அகத்தி கேரையின் பூவை எடுத்து அதன் சாற்றை பிழிந்து, கண்களில் விட்டால் கண்களில் உள்ள பிரச்சனை நீங்கி குணமடையலாம்.

பித்த வெடிப்பு

Image result for பித்த வெடிப்பு

பித்த வெடிப்பு உள்ளவர்கள் தங்களது இயல்பான வேலைகளை செய்வதற்கு கூட அவதிப்படுகிற நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள், அகத்தி கேரையையும், மருதாணி கீரையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

தோல் நோய்

Related image

தோல் நோய் உள்ளவர்கள், தங்களது உணவில் தினமும் இந்த கீரையை சேர்த்து வந்தால், தோல்நோய் குணமாகும். அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண், தொண்டைவலி போன்றவை குணமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்