வேப்பம் பூவின் அற்புத குண நலன்கள்……!!!!!
முடி உதிர்வு பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும் .அது எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அதற்க்கான முக்கிய காரணம் பொடுகு ஆகும்.பொடுகு பிரச்சனை இருந்தால் அது முடி உதிர்வை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.மேலும் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
அதற்க்காக நாம் பல சீகைக்காய் ,ஷாம்பு ,மற்றும் பல பொருட்களை நாம் பயன்படுத்தி பார்த்திருப்போம்.மேலும் இவையனைத்தும் ரசாயனம் கலந்தவையாக இருக்கும் இவ்வற்றை பயன்படுத்தியும் பலனியில்லை. வேப்பம்பூ பொடுகிற்கு மிக முக்கிய மருந்தாகும்.
வேப்பம் பூ :
தேங்காஎண்ணெயுடன் வேப்பம்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி பின்பு அதனை வடிகட்டி நன்கு தலைமுடி மயிர் கால்களில் படும் படி நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் .வேப்பம்பூவை தொடர்ந்து பயன்படுத்தினால் பித்தக்கோளாறுகளை சரி செய்யும்.
கிராம புறங்களில் வேப்பம்பூவை பயன்படுத்தி வேப்பம்பூ துவையல்,வேப்பம்பூ ரசம் வைத்து குடிப்பதால் நாவின் சுவை மொட்டுக்கள் தூண்டப்பட்டு நன்கு பசி எடுக்கும்.
நீண்ட நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு மண்ணீரல் ,கல்லீரல் பாதிக்கபட்டு இருந்தால் வேப்பம்பூவை பயன்படுத்தி ரசம் வைத்து குடிப்பதால் நாவின் கசப்பு தன்மையை சரிசெய்து சுவை மொட்டுக்கள் தூண்டப்பட்டு நன்கு பசி எடுக்கும் .மேலும் பாத எரிச்சலை குணப்படுத்தும்.கை,கால்களில் ஏற்படும் தோல் உரிவை தடுக்கும் .