பெருமூச்சு ஏன் வருகிறது?.. இதனால் ஆபத்து உண்டா..? மருத்துவர்கள் கூறுவது என்ன.?

sighing (1)

சென்னை -பெருமூச்சு விடுவது என்பது மனிதர்களின் இயல்பான செயல்களில் ஒன்று. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட பெருமூச்சு விட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதைப் பற்றி அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் ஆன அமுதாசுந்தர் அவர்கள் பல காரணிகளையும் தனது யூட்யூப்  பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மூச்சை இழுத்து  ஆழ்ந்த சத்தத்துடன் விடக்கூடியது தான் பெருமூச்சு.

இப்படி விடுதல் மூலம் இரண்டு மடங்கு காற்றை நுரையீரல் உள்ளே  இழுக்கிறது இதனால் நுரையீரலில்  உள்ள காற்று பைகள் திறக்கவும் உதவுகிறது. இதுவே அடிக்கடி வருகிறது என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் பயம், பதட்டம், மன அழுத்தம், நிம்மதி போன்ற மனம் சார்ந்த காரணங்களாலும் பெருமூச்சு ஏற்படுகிறது. இதனை மருத்துவர்கள் ஹைப்பர் வெண்டுலேசஷன்  சின்ட்ரோம்  என்று கூறுகின்றனர்.

ஒரு சிலர் இந்த அறிகுறிகள் இருந்தால் தனக்கு  ஆஸ்துமா அல்லது இதய கோளாறு ஏதேனும்  ஏற்பட்டிருக்கும் என அச்சமடைவதும் உண்டு. இந்த பெருமூச்சை எளிதில் குணப்படுத்தி விட முடியும். பாதிக்கப்பட்ட நபரின் மனதை சமநிலைப்படுத்தும் போது இது குணமாகிவிடும். செரிமான கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்த பெருமூச்சு ஏற்படுகிறது. அதாவது உணவுக் குழாயில் செரிமானம் ஆகாத உணவுகள் தங்கி தடையை ஏற்படுத்தும் இதனால் கூட பெருமூச்சு ஏற்படுகிறது. மேலும் அதிகம் சாப்பிட்டாலோ  அல்லது பசியோடு இருந்தாலோ  உடலில் வாய்வு உருவாகும் இதனால் பெருமூச்சு விடும் நிலைமை ஏற்படும், இதனை  சரியாக உணவு உட்கொள்வதன் மூலம்  சரி செய்து விட முடியும்.

பானம் தயார் செய்யும் முறை;

சுக்குப்பொடி அரை ஸ்பூன், ஓமம் பொடி அரை ஸ்பூன், எலுமிச்சை ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பீன்ச்  இவற்றை தண்ணீரில் கலந்து காலை 11 மணி அளவில் அதாவது காலை மற்றும் மதிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அருந்த வேண்டும். இதன் மூலம் செரிமான கோளாறால் உங்களுக்கு பெருமூச்சு ஏற்பட்டிருந்தால் குணமாகிவிடும் .

மன அழுத்தத்தால் பெருமூச்சு ஏற்பட்டிருந்தால் அரை ஸ்பீன்ச்  பட்டை தூள், அரை ஸ்பூன் வல்லாரை பொடி சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வரும் வரை கொதித்தபின் வடிகட்டி தேன் கலந்து மாலை4-5 இந்த  நேரங்களில் குடித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான மூச்சுப் பயிற்சிகளான பிராணயாமம், தியானம் போன்றவற்றை மேற்கொள்ளும்போது எளிதில் குணப்படுத்தி விட முடியும். இவற்றைப் பின்பற்றியும் தொடர்ந்து பெருமூச்சு இருந்து இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi