குழந்தைகள் விரலை ஏன் வாயில் வைக்கிறார்கள் தெரியுமா..?

children put their fingers in their mouths

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் இன்றியமையாத உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது என குழந்தை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

1. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

2. குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத்தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்புகின்றன.

3. குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம்தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

4. பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், ஒரு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.

5. விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால்.விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும். அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்