சென்னை: நாம் சிறுவயதில் சாப்பிடுவது தான் முதுமையில் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய தாத்தா, பாட்டி, குழந்தை பருவத்தில் சாப்பிட்ட சத்தான உணவுதான் அவர்கள் இப்போது ஆரோக்கியத்திற்கு காரணம்.ஆனால், தற்போதைய தலைமுறையினர் 30 வயதிலேயே பலம் இழந்து வருகின்றனர். அதனால் நாம் விழித்துக்கொண்டு நம் குழந்தையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பழங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
ஆப்பிள் ;நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகிவிடும். அதனால் தான் ஆறு மாதத்தில் இருந்தே இணை உணவாக ஆப்பிளை தேர்வு செய்யலாம். மேலும் ஆப்பிளை வேக வைத்து மசிந்து கொடுப்பதன் மூலம் சளி தொந்தரவு ஏற்படாது.
பப்பாளி; குழந்தையின் சரும பாதுகாப்பிற்கும் நிற மாறுதலுக்கும் மிக உதவியாக இருக்கும் பழம் பப்பாளியாகும் . விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண் பார்வை திறனையும் அதிகரிக்கிறது .ஆறு மாதம் முடிந்த பிறகு பியூரியாக செய்து கொடுக்கலாம். எட்டு மாதங்களுக்குப் பிறகு சிறு சிறு துண்டுகளாக மசிந்து கொடுக்கலாம்.
வாழைப்பழம்;அதிக ஊட்டச்சத்தும் ,நார்ச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை ஆறு மாதங்களுக்குப் பிறகு அதன் உட்புறத்தில் இருக்கும் சிறு விதைகளை நீக்கி கொடுக்க வேண்டும். சளி தொந்தரவு இருந்தால் வாழைப்பழத்தை வேகவைத்து மசித்து கொடுக்கலாம். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு செவ்வாழை அல்லது நேந்திரம் பழத்தை ஸ்லைஸ் வடிவில் நறுக்கி நெய்யில் லேசாக வறுத்து கொடுத்து வருவதன் மூலம் குழந்தையின் உடல் எடை கூடும்.
கொய்யா பழம் ;கொய்யா பழம் சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளும். இதிலுள்ள விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. கொய்யா பழத்தின் தோல் மற்றும் விதை பகுதிகளை நீக்கி சதை பகுதியை மட்டும் நன்கு மசிந்து ஒன்பது மாதம் நிறைவான பிறகு கொடுக்கவும்.
ஆரஞ்சு பழம் ;அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்ட ஆரஞ்சு பழத்தை விதை மற்றும் தோலை நீக்கி குழந்தைக்கு கொடுக்கலாம் .ஜூஸாக கொடுப்பதை விட இவ்வாறு கொடுத்தால் நார்ச்சத்து அவர்களுக்கு கிடைக்கும்.
திராட்சை பழம்;திராட்சை பழம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பத்து மாதத்தில் இருந்து கொடுத்து வரலாம். கட்டாயம் திராட்சை பழத்தை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரில் கழுவி தோலை நீக்கி கொடுக்க வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பழங்கள் இன்றியமையாதது .அதனால் ஆறு மாதத்திலிருந்து பழங்களை அவர்களுக்கு அறிமுக படுத்த வேண்டும். எந்த பழம் அவர்களுக்கு அதிகமாக பிடிக்கிறதோ அதை அடிக்கடி கொடுக்கலாம். சிறுவயதிலேயே அவர்களுக்கு பழங்களை அறிமுகப்படுத்துவதால் அவர்கள் வளர்ந்த பிறகு பழங்களால் எந்த ஒரு ஒவ்வாமையும் அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…