என்னது.. இந்த பொருள்களை எல்லாம் இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாதா?

iron vessels

Iron vessles-இரும்பு பாத்திரத்தில் எந்த உணவுகளை சமைக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.

மாறிவரும் நவீன உலகில் சமையல் பாத்திரங்கள் பல வந்து விட்டாலும் தற்போது  இரும்பு பாத்திரத்தின் நன்மைகளை அறிந்து மக்கள் அதை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

ஆனால் எந்த உணவு பொருள்களையெல்லாம் சமைக்க கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு  இல்லை. சில உணவுகளை இரும்புடன் கலக்கும்போது அது எதிர் வினைகளை உண்டாக்கி நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

இரும்புடன் சேரக்கூடாத உணவுகள்:

அமிலத்தன்மை வாய்ந்த எலுமிச்சை, புளி, சிட்ரிக் ஆசிட் கொண்ட   உணவுகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும். இது இரும்புடன் வினைபுரிந்து பாத்திரத்தை எளிதில் துரு ப்பிடிக்க செய்துவிடும். அது மட்டுமல்ல நம் உடலுக்கு உபாதைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

மீன் போன்ற கடல் உணவுகளையும் சமைக்க கூடாது, ஏனெனில் இரும்பு வெப்பத்தை நீண்ட நேரம் வைத்துக் கொள்ளக்கூடியது. கடல் உணவுகளின் தோல்கள் மெல்லிதாக இருக்கும் .இதனால் அதன் தோல்கள் பாத்திரத்தில் ஒட்டிக் கொள்வதுண்டு அதன் சுவை மற்றும் நிறத்தில் மாறுபாடு ஏற்படலாம்.

கீரை மற்றும் காளான் உணவுகளை இரும்பு பாத்திரத்தில் வேக வைக்க கூடாது. இந்தப் பொருள்களை அதிக நேரம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் வீணாகிவிடும்.இரும்பு பாத்திரமானது அதிக வெப்பத்தை தன்னுள் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் கீரை, காளான்களை இரும்பில் சமைப்பதை தவிர்க்கவும்.

பாஸ்தா உணவுகளில் நாம் தக்காளி சாஸ் போன்றவற்றை சேர்த்து சமைப்போம்,  இதனால்  தக்காளியில் உள்ள அமிலத்தன்மை உள்ளது இது இரும்புடன் கலந்து வினை புரியும்.

மேலும் ரசம் மற்றும் துவர்ப்பு தன்மை உடைய எந்த ஒரு உணவுகளையும் இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது.

இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். குறிப்பாக இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது. ஆனால் நாம் மேற்க்கூறியுள்ள  ஒரு சில உணவுகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்