என்னது!! பூனை மலம்.. அல்சைமர் நோயை குணப்படுத்துமா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

toxoplasma gondii parasite - cats

டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது.

இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பூனை மலத்தில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி பயன்படுத்தி குணப்டுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நேச்சர் மைக்ரோபயாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, பூனைக் மலத்தில் காணப்படும் ‘டோக்ஸோபிளாஸ்மா கோண்டி’ என்கிற பொதுவான ஒட்டுண்ணி, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி, இது மனித மூளைக்கு நேரடியாக சிகிச்சையளிப்பதற்கான  புரதங்களை வழங்குவதற்கான ஒரு புதிய வழியை வழங்கும். டோக்ஸோபிளாஸ்மா கோண்டி இயற்கையாகவே செரிமான அமைப்பிலிருந்து மூளைக்கு நகர்கிறது. அங்கு புரதங்களை நியூரான்களாக சுரக்கிறது. ஆனால், இரத்த-மூளை ஓட்டத்தைக் கண்டறிய மருத்துவர்கள் முயற்சிக்கும் போது, இத்தகைய கோளாறுகளுக்கான சிகிச்சைகள் பெரும்பாலும் சவாலாக எதிர்கொள்கின்றன.

இருந்தாலும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுண்ணியானது இத்தகைய தடைகளைத் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், டோக்ஸோபிளாஸ்மா கோண்டியை வைத்து சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியவும், பாதுகாப்பை உறுதிப்படுவதற்கும் இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்படும் என தெரிவித்துள்னர்.

அல்சைமர் :

அல்சைமர் நோய் என்பது முதுமையின் போது ஏற்படும் மறதி நோயாகும். இது ஒருவரின் நினைவு மற்றும் பிற முக்கியமான மன செயல்பாடுகளை அழிக்கும் நோய். இதனால், மூளை செல் இணைப்புகள் மற்றும் செல்கள் தாமாகவே சிதைந்து இறக்கின்ற

பார்கின்சன் :

பார்கின்சன் நோய் என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கோளாறு ஆகும். இது, நடுக்கம் உட்பட இயக்கத்தை பாதிக்கும் மைய நரம்பு மண்டலத்தின் கோளாறு. மூளையில் உள்ள நரம்பு செல் சேதம் டோபமைன் அளவைக் குறைத்து, பார்கின்சனின் அறிகுறிளை கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்