என்னது.. உப்பில் பிளாஸ்டிக்கா..? உஷார் மக்களே..!

micro plastic

சென்னை : நம் உண்ணும் உணவில் உப்பும் சர்க்கரையும் இன்றியமையாதது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற வாசகத்திற்கு இணங்க உப்பில்லா சமையல் ருசி இருக்காது. பிளாஸ்டிக் பல வகைகளில் நம் உடலுக்குள்  செல்கிறது என்றாலும் உப்பு மற்றும் சர்க்கரை மூலம் நம் உடலுக்குள் செல்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஏனென்றால் தினசரி சமையலில் சேர்க்கும் முக்கிய உணவுப்பொருட்களாக உள்ளது.

உன் சமையலறையில் ..உப்பா சர்க்கரையா.. என்ற பாடலுக்கு எதிரொளியாக உன் சமையலறையில் உப்பா.. பிளாஸ்டிக்கா.. என பாட துவங்கலாம். ஆமாங்க.. நாம் பயன்படுத்தும் உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது. இந்தியாவில் விற்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையை ஆய்வு செய்த டாக்ஸிக் லிங்க் என்ற ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி அயோடின் சேர்க்கப்பட்ட தூள் உப்பில் அதிக அளவு மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது. இதன் அளவு 0.1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது .ஒரு கிலோ தூள் உப்பில் 89.15 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பில் 6. 70 பிளாஸ்டிக் துகள்களும் கலந்துள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் சர்க்கரையிலும் கலந்துள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது .

ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில் 11.85 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும்  ,ஒரு கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும்  உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் வெள்ளை, நீளம், சிகப்பு, கருப்பு ,பச்சை, வயலட், மஞ்சள் போன்ற நிறங்களில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும் பாறை படிம உப்புக்களில்[ராக் சால்ட் ] மைக்ரோ பிளாஸ்டிக் அளவு குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பக்க விளைவுகள்;

மனித உடலில் ரத்தத்தில் கலக்கும் இந்த பிளாஸ்டிக்  துகள்கள் புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற நோய்களையும் ,இன்னும் பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதற்கு மக்களாகிய நமக்கும் பங்கு உள்ளது. பாலித்தீன் பைகள் உட்பட பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உப்பு கடலில் கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கடலில் பிளாஸ்டிக் கலக்கப்படுவதால் நீர் மட்டுமல்லாமல் நில மாசுபாடும் அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் தான் நம் உண்ணும் உணவில் பிரதிபலிக்கின்றது.

பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த நிலத்தில்தான் கரும்பு விளைகின்றது. அந்த கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பது முதல் அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் ஆதிக்கம் இருந்து வருகிறது .இப்படி நம் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்து அதற்கு மாற்று வழிகளை தேர்ந்தெடுப்பது தான் நம் ஆரோக்கியத்திற்கும் வருங்கால தலைமுறையினருக்கும்  சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்