தாய்மை அடையும் தாய்மாருக்கு ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், மறு பக்கம் ஒரு விதமான பயமும் இருக்கும். பெண்களின் பிரசவம் என்பது மாரு பிறவி என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை விட அதிகமாக அறுவை சிகிச்சை மூலமாக தான் பிரசவம் நடைபெறுகிறது.
நமது இந்திய பாரம்பரியத்தில் சில பாரம்பரிய முறைகள் விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டவை. அதில் ஒன்று தான் வளைகாப்பு. வளைகாப்பு போடும் போது மூத்த சுமங்கலிகள் தான் வளையல்களை போட்டு விடுவதுண்டு.
அது எதனை குறிக்கிறது என்றால், ” எங்களை எல்லாம் பார்…! நாங்கள் எத்தனை பிள்ளைகளை பெற்று உன் முன் நிற்கிறோம். எங்களை போன்று நீயும் மிக எளிதாக உன் பிரசவத்தை கடப்பாய் என்று அந்த பெண்ணை தைரியமூட்டுவது போன்று இருக்கும்.
இந்த நிகழ்வில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால், வளையல் இடும் பெண்ணின் கரங்களை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டு கூறுவார்கள். கை விரல்களை கூப்பி வளையல்களை உள்ளே செலுத்தும் போது சற்று சுலபமாக இருக்கும்.
பின் வளையலை மணிக்கட்டுக்கு செலுத்தும் போது சற்று கடினமாக தான் இருக்கும். அந்த வலியை சற்றே பொறுத்து கொண்டால் அது எளிதாக உள்ளே போய் விடும். அது போன்று தான் பிரசவமும் என்று எடுத்து காட்டுவது தான் இந்த முறை.
இந்த வளைகாப்பு முறை பிரசவத்துக்கு தயாராகும் பெண்களின் மனதில் உள்ள பயத்தை நீக்கி, மன தைரியத்தை அளிக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக செல்லும் போது மன துணிச்சலுடன் செல்வதற்காக செய்யப்படுகிற முறை தான். இந்த வளைகாப்பு முறை பிரசவத்துக்கு தயாராகும் பெண்களுக்கு மன தைரியத்தை கொடுக்கிறது என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…