கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு போடுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா…?

baby shower

தாய்மை அடையும் தாய்மாருக்கு ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், மறு பக்கம் ஒரு விதமான பயமும் இருக்கும். பெண்களின் பிரசவம் என்பது மாரு பிறவி என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை விட அதிகமாக அறுவை சிகிச்சை மூலமாக தான் பிரசவம் நடைபெறுகிறது.

வளைகாப்பு :

நமது இந்திய பாரம்பரியத்தில் சில பாரம்பரிய முறைகள் விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டவை. அதில் ஒன்று தான் வளைகாப்பு. வளைகாப்பு போடும் போது மூத்த சுமங்கலிகள் தான் வளையல்களை போட்டு விடுவதுண்டு.

அது எதனை குறிக்கிறது என்றால், ” எங்களை எல்லாம் பார்…! நாங்கள் எத்தனை பிள்ளைகளை பெற்று உன் முன் நிற்கிறோம். எங்களை போன்று நீயும் மிக எளிதாக உன் பிரசவத்தை கடப்பாய் என்று அந்த பெண்ணை தைரியமூட்டுவது போன்று இருக்கும்.

சுவாரஸ்யமான ஒற்றுமை: 

இந்த நிகழ்வில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால், வளையல் இடும் பெண்ணின் கரங்களை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டு கூறுவார்கள். கை விரல்களை கூப்பி வளையல்களை உள்ளே செலுத்தும் போது சற்று சுலபமாக இருக்கும்.

பின் வளையலை மணிக்கட்டுக்கு செலுத்தும் போது சற்று கடினமாக தான் இருக்கும். அந்த வலியை சற்றே பொறுத்து கொண்டால் அது எளிதாக உள்ளே போய் விடும். அது போன்று தான் பிரசவமும் என்று எடுத்து காட்டுவது தான் இந்த முறை.

மன தைரியம் :

இந்த வளைகாப்பு முறை பிரசவத்துக்கு தயாராகும் பெண்களின் மனதில் உள்ள பயத்தை நீக்கி, மன தைரியத்தை அளிக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக செல்லும் போது மன துணிச்சலுடன் செல்வதற்காக செய்யப்படுகிற முறை தான். இந்த வளைகாப்பு முறை பிரசவத்துக்கு தயாராகும் பெண்களுக்கு மன தைரியத்தை கொடுக்கிறது என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்