நாம் தொலைத்த நாகரீக முறைகள்…! நீடித்த வாழ்வை அளிக்கும் நீராகாரம்….!!!
- இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.
முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும்.
இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகளை கண்டுபிடித்த போதிலும், அது நமக்கு பலன் கொடுப்பதில்லை.
முதியவர் பட்டம்
30 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. அக்காக்காலத்தில் 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தனர்.
ஆனால் இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பழைய சோறு
நமது முன்னோர்கள் எல்லாரும் 90 வயது வரை திடகாத்திரத்தோடு வாழ்ந்தார்களே? அது எப்படி? அது அவர்களின் உணவு முறைகள் தான்.
பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரத்தை, நாம் வீணாக வெளியே கொட்டாமல், அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதனால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரில், வைட்டமின் B6, B12 போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளது.
செரிமானம்
பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரை தொடர்ந்து குடித்து வந்தால், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.
தேநீர்
பசியை தடை செய்யும் தேநீர்
தேநீர் நமது வாழ்வில் நன்கு கலந்து விட்ட ஒரு உணவு முறையாகும். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும் பொது பசி எடுப்பதே தெரியாமல் போய்விடுகிறது.
உடல் எடை அதிகரிப்பு
நமது உடல் எடை அதிகரிப்பதற்கு தேநீரும் ஒரு முக்கிய காரணமாகும். அதிகமாக தேநீர் குடிப்பதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் இதயக்கோளாறுகள், நரம்பு மண்டலா பாதிப்புகள், தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
செயற்கை பானங்கள்
நாம் என்று நமது நாகரீக உணவு முறையான, பழங்கஞ்சி தண்ணீரை குடிக்க மறந்தோமோ, அன்றே நமது ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம். இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும், எந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறியாமல் அருந்தி வருகினறனர்.
இதையும் படிங்க….