சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

Published by
K Palaniammal

பதநீர் – கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

பதநீர் தயாரிக்கும் முறை:

  • பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம் ஆகும். பனை மரத்தில் இருந்து வரும் பாலையை முழுவதுமாக வளர விட்டால் அதிலிருந்து கிடைப்பது தான் நுங்கு.
  • அந்த பாலையை வளர விடாமல் நுனியில்  சீவி அதில் ஒரு பானையில் சுண்ணாம்பை தடவி கட்டி வைத்து விட்டால் அதிலிருந்து நீர் கசிந்து வரும். பின்பு அதை மறுநாள் எடுத்தால்  பதநீர் கிடைத்துவிடும்.
  • சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும் மேலே உள்ள தெளிந்த நீரை தான் நாம் பருக வேண்டும். இது  இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கலப்படம் இல்லாத பானம் ஆகும்.

பதநீரின் ஆரோக்கிய நன்மைகள்:

  • பதநீரில் உள்ள பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காகத்தான் சுண்ணாம்பு தடவப்படுகிறது மேலும் அதற்கு இனிப்பு சுவையும் கொடுக்கிறது.
  • சுண்ணாம்பு கலத்தப்படாத நீரை தான் கள்ளு  என்பார்கள். ஏனென்றால் சுண்ணாம்பு கலக்கவில்லை என்றால் அதில் புளிப்பு தன்மை வந்துவிடும்.
  • வெயில் சூடினால் ஏற்படும் சிறுநீர் தாரை எரிச்சல், நீர் கடுப்பு போன்றவை குணமாகும். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் விரைவில் குணமாகும் .
  • இந்த பத நீரை 48 நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் மேகநோய் குணமாகிறது. வயிற்று வலி ,வயிற்றுப்புண் போன்றவற்றையும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.உடல் உஷ்ணத்தை . உடனடியாக குறைக்கக்கூடிய பானம் .
  • மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். பதநீரில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை உடனடி ஆற்றலை கொடுக்கிறது.உடல் மெலிந்தவர்களுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து மிக்க பணமாகும்.

பதநீர் எடுத்துக் கொள்ளும் முறை:

பதநீரை காலையில் வெறும் வயிற்றில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் முழு நன்மையும் நம்மால் பெற முடியும். மரத்திலிருந்து இறக்கிய மூன்று மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும்.

ஒரு சிலர்  பதநீர் மாலை வரை கெட்டுப் போகாமல் இருக்க சுண்ணாம்பை அதிகம் கலக்கி விற்பார்கள். அதனால்  மாலையில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக சுண்ணாம்பு நம் வயிற்றில் புண்ணை ஏற்படுத்தும். பதநீரை சாப்பிட்டுவிட்டு ஓடக்கூடாது. ஏனென்றால் பதநீர் குடித்தவுடன் நம் உடலில் வாயு நுரைத்தல் ஏற்படும் .

எனவே இந்த கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த பதநீரை குடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

Recent Posts

நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…

32 mins ago

Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…

சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…

33 mins ago

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

58 mins ago

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

2 hours ago

குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…

3 hours ago