உங்கள் எலும்பு இரும்பாக மாற வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க.!

Published by
K Palaniammal

இன்று பலரும் சந்திக்கும் உடல் பிரச்சனைகளில் எலும்பு தேய்மானம் தான். இதை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் நம் எலும்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

  • எலும்பு வளர்ச்சிக்கு முக்கியபங்கு வகிப்பது   கால்சியம் ,விட்டமின் டி, சிங்க், பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துக்கள்   அவசியம் தேவைப்படும்.
  • ஒரு சிலருக்கு நடக்கும் போது எலும்புகளில் சத்தம் வரும், இது எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறியாகும். இந்த சூழ்நிலையில் நாம் உணவுகளில் அது கவனம் செலுத்தி வந்தால் மாத்திரைகள் உட்கொள்ளும் அளவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • பாலில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என பலரும் கூறுகிறார்கள் ஆனால் இந்த பால் ஒரு சிலருக்கு பிடிக்காது. அந்த பாலுக்கு இணையான கால்சியம் சத்து பல உணவுப் பொருட்களிலும் உள்ளது.

பாலை தவிர கால்சியம் உள்ள உணவுகள் 

  • 100 கிராம் முருங்கைக்காயில் 440 mg  கால்சியம் சத்தும் 100 கிராம் ஆரஞ்சில்  50 mg  கால்சியமும் 100 கிராம் வெண்டைக்காயில் 82 mg  கால்சியமும், 100 கிராம் தயிரில் 40 mg  கால்சியமும், 100 கிராம் பசலிக்கிரையில் 250 மில்லி கிராமும்  பப்பாளியில் 20 mg  உள்ளது. 250 கிராம் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
  • ஆகவே பாலை விட முருங்கைக்காயில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது மிக எளிமையாக கிடைக்கக்கூடிய உணவுகள் தான் .அது மட்டுமல்லாமல் முருங்கைக்கீரை, பாலக்கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகியவற்றிலும் சுண்ணாம்பு சத்து  அதிகம் காணப்படுகிறது. சிறு தானியங்களில் கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது தினமும் இட்லி தோசைக்கு பதில் இந்த சிறுதானியங்களையும் சேர்த்துக் கொள்வது அவசியம், அது மட்டுமல்லாமல் இந்த சுண்ணாம்பு சத்து  எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் பற்கள், முடி, நகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.
  • நம்மில் பலரும் மறந்து விட்ட காய்கறிகளில் கொத்தவரங்காய் மற்றும் சுண்டைக்காய் இதில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் உள்ளது தினமும் நம் உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நமக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சாத்தும் கிடைத்து விடும்.

நம் உடலுக்கு ஒரு அமைப்பை கொடுப்பதே எலும்பு தான் அந்த எலும்பு வலிமையாக இருக்க நம் உணவில் பல மாற்றங்களை கொண்டு  வந்து எலும்பை வலிமையாக வைத்துக் கொள்வோம்.

Recent Posts

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

15 mins ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

10 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

11 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

11 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

11 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

13 hours ago