உங்கள் எலும்பு இரும்பாக மாற வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க.!
இன்று பலரும் சந்திக்கும் உடல் பிரச்சனைகளில் எலும்பு தேய்மானம் தான். இதை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் நம் எலும்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
- எலும்பு வளர்ச்சிக்கு முக்கியபங்கு வகிப்பது கால்சியம் ,விட்டமின் டி, சிங்க், பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துக்கள் அவசியம் தேவைப்படும்.
- ஒரு சிலருக்கு நடக்கும் போது எலும்புகளில் சத்தம் வரும், இது எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறியாகும். இந்த சூழ்நிலையில் நாம் உணவுகளில் அது கவனம் செலுத்தி வந்தால் மாத்திரைகள் உட்கொள்ளும் அளவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- பாலில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என பலரும் கூறுகிறார்கள் ஆனால் இந்த பால் ஒரு சிலருக்கு பிடிக்காது. அந்த பாலுக்கு இணையான கால்சியம் சத்து பல உணவுப் பொருட்களிலும் உள்ளது.
பாலை தவிர கால்சியம் உள்ள உணவுகள்
- 100 கிராம் முருங்கைக்காயில் 440 mg கால்சியம் சத்தும் 100 கிராம் ஆரஞ்சில் 50 mg கால்சியமும் 100 கிராம் வெண்டைக்காயில் 82 mg கால்சியமும், 100 கிராம் தயிரில் 40 mg கால்சியமும், 100 கிராம் பசலிக்கிரையில் 250 மில்லி கிராமும் பப்பாளியில் 20 mg உள்ளது. 250 கிராம் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
- ஆகவே பாலை விட முருங்கைக்காயில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது மிக எளிமையாக கிடைக்கக்கூடிய உணவுகள் தான் .அது மட்டுமல்லாமல் முருங்கைக்கீரை, பாலக்கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகியவற்றிலும் சுண்ணாம்பு சத்து அதிகம் காணப்படுகிறது. சிறு தானியங்களில் கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது தினமும் இட்லி தோசைக்கு பதில் இந்த சிறுதானியங்களையும் சேர்த்துக் கொள்வது அவசியம், அது மட்டுமல்லாமல் இந்த சுண்ணாம்பு சத்து எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் பற்கள், முடி, நகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.
- நம்மில் பலரும் மறந்து விட்ட காய்கறிகளில் கொத்தவரங்காய் மற்றும் சுண்டைக்காய் இதில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் உள்ளது தினமும் நம் உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நமக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சாத்தும் கிடைத்து விடும்.
நம் உடலுக்கு ஒரு அமைப்பை கொடுப்பதே எலும்பு தான் அந்த எலும்பு வலிமையாக இருக்க நம் உணவில் பல மாற்றங்களை கொண்டு வந்து எலும்பை வலிமையாக வைத்துக் கொள்வோம்.