உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இந்த கிழங்கை சாப்பிடுங்க!
கருணை கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அனைத்து வகையான கிழங்குகளிலும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.
தற்போது இந்த பதிவில் கருணை கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செரிமானம்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை தான். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கருணை கிழங்கை சேர்த்துக் கொண்டால், செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடை
இன்றை இளம் தலைமுறையினர் உடல் எடையை குறைப்பதற்காக பல வகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக தங்களது பணத்தையும் அதிகப்படியாக செலவு செய்கின்றனர். இவ்வாறு உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவோர் தங்களது உணவில் இந்த கிழங்கை அடிக்கடி சேர்த்துக் கொண்டாலே, உடல் எடை குறைந்து விடும்.
மூலநோய்
ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முலைகளை சிறிது சிறிதாக கரைத்து மூலத்தை வேரோடு குணப்படுத்தாக கூடிய ஆற்றல் இந்த கிலனிற்கு உள்ளது. ஒரு மதத்திற்கு தொடர்ந்து இந்த கிழக்கை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குடல் கிருமி
நமது உடலில் பல நோய்களுக்கு காரணம் கிருமிகள் தான். இந்த கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், குடல் கிருமி சேராமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.