உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க!
நம்மில் அதிகமானோர் இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம்.
உடல் எடை
இன்று அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் பிரயாசப்படுவதுண்டு. இதற்காக தங்களது பணத்தை செலவு செய்து பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்கை மருந்துகளை உபயோகிக்கின்றனர். ஆனால்,உடல் எடையை நாம் இயற்கையான முறையில் குறைப்பதற்கு முயற்சிப்பது தான் நல்லது.
அந்த வகையில், உடல் எடையை குறைக்க விரும்புவோர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது.
கொழுப்பு
வெண்டைக்காயில் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை நோய்
இன்று அதிகமானோர் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த பிரச்னை உள்ளவர்கள் முதல் நாள் இரவு நீரில் வெண்டைக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி போட்டு, அடுத்த நாள் காலையில், இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன், சர்க்கரை நோய் பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கிறது.
மலசிக்கல்
மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி வெண்டைக்காயை சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.