இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? அப்போ தினசரி உணவில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..
இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள்.
பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது.
நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில பொருட்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம்.
1. பெர்ரி பழங்கள்
- அனைத்து வகை பெர்ரி பழங்களும் நம் இதய நலனுக்கு நல்லது தான்.
- நாம் விரும்பி உண்ணும் கோடைகால சீசன் பழமான நாவல் பழங்களும் செர்ரி வகையை சேர்ந்ததுதான்.
- இதய நோய்களை செர்ரி பழங்கள் தடுக்கக் கூடியது.
2. மீன்:
- பொதுவாக இதய நோயாளிகள் அசைவம் சாப்பிடுவது என்றால் மீன் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்களே அறிவுறுத்துவார்கள்.
- மத்தி, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற பல மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
- இது நம் ரத்த கொழுப்பை கரைக்க கூடியது.
3. தக்காளி :
- தினசரி நம் உணவில் தவறாது இடம்பெறும் உணவுப் பொருள் தான்.
- இது நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை மேம்படுத்தக் கூடியது.
- நல்ல கொழுப்பு அதிகரித்தால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
4. கீரைகள் :
- பச்சைக் கீரைகள் அல்லது கீரையுடன் கூடிய காய்கறிகள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- எந்த அளவுக்கு மிகுதியாக கீரைகள் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இதய நலனுக்கு நல்லது.
- இறைச்சியை போல் விலை உயர்ந்தவை அல்ல கீரைகள். எனவே தினசரி வாங்கி சாப்பிட பழகுங்கள்.
5. சாக்கலேட் :
- சர்க்கரை நோயாளிகளுக்கு சாக்கலேட் எதிரிதான் என்பதை மறுக்க இயலாது.
- ஆனால், அடர்ந்த நிறம் கொண்ட சாக்கலேட்டுகளில் இதய நோய்களை தடுப்பதற்கான பண்புகள் உள்ளன.
- அதற்காக சாக்கலேட் நல்லது என்று எண்ணி மிகுதியாக சாப்பிட்டுவிட கூடாது.