பொடுகு தொல்லையை போக்குவதற்கு நெய்யை பயன்படுத்துங்க
- தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க உதவும் நெய்.
இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்னை தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பதற்காக பலர் செயற்கை மருத்துவங்களை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
நாம் இயற்கையான முறையில், பல வழிமுறைகளை கையாளலாம். இதனால் நமக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படுவதில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்து கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
தற்போது இந்த பதிவில் நெய்யில் மருத்துவ குணங்கள் பற்றியும், தலைமுடி பிரச்சனைகளுக்கு தரும் தீர்வு பற்றியும் இந்த பதிவில் பாப்போம்.
கண்டிஷனர்
தலைமுடிக்கு நெய் ஒரு சிறந்த கண்டிஷனாராக உள்ளது. தேங்காய் எண்ணெயுடன் ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் நெய் கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள்.
ஆண்டி ஆக்ஸிடண்ட், கொழுப்புச் சத்து ஆகியவை நிறைந்திருப்பதால் அவை தலைமுடி வேர்களால் உறிஞ்சப்பட்டு வறண்ட வேர்களுக்கு எண்ணெய் பிசுக்கை அளித்து கண்டிஷ்னராக செயல்பட்டு சிறந்த தீர்வை அளிக்கிறது.
பொடுகு தொல்லை
நமது அன்றாட வாழ்வில் நமக்கு இருக்கிற பெரிய பிரச்சனையே பொடுகு தொல்லை தான். நெய் இதற்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. ஒரு மேசைக்கரண்டி நெய்யில் பாதியளவு எலுமிச்சை சாறைப் பிழிந்து தலையில் மசாஜ் செய்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.
முடி பளபளக்க
இன்று பலர் பல கெமிக்கல் கலந்த ஷாம்பை பயன்படுத்துவதால், தலைமுடி பிரச்சனைகள் பல உருவாகிறது. நெய்யை சூடு படுத்தி, வெதுவெதுப்பான சூடு பதத்திலேயே தொட்டுத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், நெய்யின் எண்ணெய் தன்மை மொரமொரப்பான முடியையும் நொடியில் பளபளக்கச் செய்யும் தன்மையையும் கொண்டுள்ளது.
முடி முனைகள் உடைவது
பலருக்கு முடி முனைகள் உடைவது வழக்கமாக உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்காமல் அப்படியே விட்டுவிட்டு, முடியில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நெய்யில் இருக்கும் வைட்டமின் A,D,K2 E மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் முடிக்கு ஊட்டச்சத்து அளித்து தலை முடி முனைகள் உதிர்வதை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
முடி உதிர்வு
இன்று பலருக்கு முடிஉதிர்வு பிரச்னை ஒரு பிரதான பிரச்சனையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மனா அழுத்தம் காரணமாக பலருக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது.
நெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 ஆகிய கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதாலும், வைட்டமின் A மற்றும் E, மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் போன்ற புரதச் சத்துகளும் அதிகமாக இருப்பதால் வேர்களில் தலைமுடி வளர்வதற்கான செல்களைத் தூண்டி, முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.