அடிக்கடி கூல்ட்ரிங்ஸ் குடிப்பவர்களே உஷார் ..இதெல்லால்  தெரிஞ்ச தொடவே மாட்டீங்க ..!

cool drinks

Chennai-குளிர்பானங்கள் குடிப்பதால் நம் உடலுக்கு தீங்கு என தெரிந்தும் நம்மில் பலரும் அதை வாங்கி அருந்துவோம் ,  குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்போம். ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது குளிர்பானங்கள் குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி உணர்வு  வரும் அந்த அளவுக்கு அடிமையான மக்கள் ஏராளம். தொடர்ந்து குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும் போது விரைவில் நம் உடலை சேதப்படுத்துகிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வலிமை வாய்ந்த ரசாயனம் தான்..

குளிர்பானங்களை நாமாக வாங்கி சாப்பிடுகிறோம் என சொல்வதை விட விளம்பரங்கள் நம்மை வாங்க தூண்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக குளிர்பானங்களுக்கான விளம்பரங்கள் குழந்தைகளை அதிகம் கவருகிறது .அதன் நிறம் கண்களை கவர்ந்து வாங்க தூண்டுகிறது..

குளிர் பானங்களில் அப்படி என்னதான் உள்ளது?

குளிர்பானங்களில் அதிகமாக இருப்பது கார்பன் டை ஆக்சைடு தான். பொதுவாக நம் உடலானது ஆக்சிசனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும். ஆனால் குளிர்பானங்கள் மூலம் உடலுக்குள் செலுத்துகிறோம் .தண்ணீர், சர்க்கரை , கார்பன் டை ஆக்சைடு,மற்றும் வலிமைமிக்க  ரசாயனங்கள் இவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரித்து பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கு குளிர்பானங்களாக கொடுக்கின்றனர்..

குளிர்பானங்களை யாரெல்லாம் தொடவே கூடாது தெரியுமா?

கர்ப்பிணிகள், குழந்தைகள், தாய்மார்கள்,குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள்  மற்றும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர் பானங்களை அருந்தக்கூடாது .ஒவ்வொரு குளிர்பான பாட்டில்களிலும்  மிகச் சிறிதாக லென்ஸ் வைத்து பார்க்கும் அளவில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தான் அதை சரியாக கவனிப்பதில்லை.

குளிர் பானங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்களும்.. பாதிப்புகளும்..

குளிர்பானங்களில் இரண்டு வகை உள்ளது .அதில் ஒன்று டயட் குளிர்பானங்கள் மற்றொன்று சாதாரணமாக மார்க்கெட்டுகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் ஆகும். இதில் காபியில் இருக்கும் கஃபைன் அளவை  விட குளிர்பானங்களில் அதிக அளவு உள்ளது. 200 எம்எல் குளிர்பானத்தில் 64 மில்லி கிராம் கஃபைன்  உள்ளது.

மேலும் அதிக அளவு ப்ரக்டோஸ் உள்ளதால் கணையத்திற்கு வேலையை அதிகரித்து சர்க்கரை நோயை வரவழைக்கிறது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் உள்ள கஃபைன் உடலுக்குள் சென்றதும் மூளையை புத்துணர்ச்சி ஆக்கி டோபமைன்  என்சைமை சுரக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி  அதிக  புத்துணர்ச்சியை  ஏற்படுத்தும் . ஆனால் சிறிது நேரத்திலேயே  அதிக சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு தலைவலி, மயக்கம் போன்றவற்றை கூட ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து ஆலோசனை கூறி வருகின்றனர். இதில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் உணவில் உள்ள கால்சியம் ,மெக்னீசியம் ,சிங்க்  போன்றவற்றுடன் சேர்ந்து வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.இதனால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்பு பலவீனமாகும்  என எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..மேலும் பாஸ்பாரிக் ஆசிடை  அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால்   பற்களுக்கு தேய்மானத்தை ஏற்படுத்தும்.

ஒரு சிலர் உடல் சூடு குறைவதற்காகவும் ,பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறைவதற்காகவும் இந்த குளிர்பானத்தை அருந்துவதுண்டு. உடல் சூட்டை குறைக்க எந்த ஒரு மூலக்கூறும் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் குளிர் பானங்களை குறைத்துக் கொண்டு நமக்கு இயற்கையாகவே கிடைக்கும் இளநீர் ,பழச்சாறுகள், மோர், கூல் போன்றவற்றை அருந்த பழக்கப்படுத்திக் கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்