சர்க்கரையை ஒரே மாதத்தில் கட்டுக்குள் வைக்க இந்த பொருளே போதும்..!
Diabetic-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
சர்க்கரை உள்ளவர்களுக்கு பாத எரிச்சல். சிறுநீரக எரிச்சல் உடல் எரிச்சல் போன்றவை இருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான முக்கிய மருந்தாக நாவல் பல கொட்டையை வைத்து தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
மருந்து தயாரிக்கும் முறை;
குறிப்பிட்ட அளவு நாவல் பல கொட்டைகளை சேகரித்து நான்கு நாட்கள் வெயிலில் காய வைத்துக் கொள்ளவும் .பிறகு அதில் உள்ள மேல் தகுதியை உடைத்தால் உள்ளே இளம் பச்சை நிறத்தில் விதை போன்று இருக்கும் இதை எடுத்து இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.
பிறகு இவற்றை நன்கு அரைத்து சலித்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும்.
இதை சாப்பிட்டு ஒரு மாதத்திலேயே நல்ல மாற்றத்தை காணலாம் .பாத எரிச்சல் ,சிறுநீரக எரிச்சல் போன்றவை குறைந்து விடும். பிறகு மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாதம் இடைவேளை விட்டு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படும் அதோடு மட்டுமல்லாமல் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு நீக்கப்படுகிறது, உடல் சோர்வை உடனடியாக நீக்கும் .நரம்பு பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.
மற்றொரு மருத்துவ குறிப்பு;
வெந்தயம் 50 கிராம் அளவு எடுத்து கழுவி 12 மணி நேரம் ஊறவைத்து அதை முளைகட்டி வைத்துக் கொள்ளவும் .பிறகு அதை நிழலில் மூன்று நாட்கள் காய வைத்துக் கொள்ளவும். இப்போது அதனுடன் கருஞ்சீரகம் 50 கிராம் மற்றும் உப்பு சேர்க்காத சுண்டைக்காய் வத்தல் 50 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் .
இதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து காலை வெறும் வயிற்றில் 15 நாட்கள் குடித்து வரவும். பிறகு வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதும். இந்தக் குறிப்பை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
சர்க்கரையின் அளவை நம் உடலில் கூடினாலோ குறைந்தாலோ அதை தான் சர்க்கரை நோய் என்கிறோம். ஆனால் இந்த முறைகளை பயன்படுத்தி கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்.