சிறுநீரக கற்களை கரைக்க வீட்ல இருக்க இந்த பொருள் போதும் .!
Kidney stone-சிறுநீரக கற்களை கரைப்பது எப்படி என்றும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரகக் கல். இந்தக் கல் தொந்தரவு கோடை காலத்தில் சற்று அதிகமாக இருக்கும், அதனை கரைக்க எளிமையான வீட்டு குறிப்புகளை பார்ப்போம்.
சிறுநீரக கல் கரைய குறிப்புகள்:
ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் சோம்பை சேர்த்து கொதிக்க வைத்து அது அரை லிட்டராக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்த தண்ணீரை குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்து வலியும் குறையும்.
அரை பக்கெட் தண்ணீரில் ஐஸ் கட்டிகளை சேர்த்து குளிமையாக்கிக் கொள்ளவும். அந்த தண்ணீரில் உங்கள் பாதங்களை 10-15 நிமிடம் வைக்கவும். இவ்வாறு செய்யும்போது சிறுநீரகத்தில் உள்ள எப்பேற்பட்ட கல்லாக இருந்தாலும் கரைந்து ஓடிவிடும். மேலும் வலி உள்ள இடத்தில் சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்.
ஒரு சிலருக்கு கோடைக்காலம் தொடங்கிவிட்டால் மட்டுமே இந்த தொந்தரவு ஏற்படும். இப்படி இருப்பவர்கள் கோடை காலம் துவங்குவதற்கு முன்பு அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து ஏழு நாட்கள் வாழைத்தண்டை சாறு எடுத்து பருகி வரவும். வாழைத்தண்டு சிறுநீரகத்தை சுத்தப்படுத்தக் கூடியதாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சோடியம் அதிகம் உள்ள அப்பளம், வடகம், கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 2.5கிராம் அளவு தான் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக முந்திரி, பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,கீரைகள் கிழங்கு வகைகளான பீட்ரூட் உருளைக்கிழங்கு குறிப்பாக தரைக்கு வளரக்கூடிய எந்த ஒரு கிழங்குகளையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கீரை வகைகளை எடுத்துக் கொள்ளும் போது கீரைகளை அவித்து அந்த தண்ணீரை வடிகட்டி விட்டு வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டுக் கொள்ளலாம். பாதாம் முந்திரி போன்ற கொட்டை வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளாமல் வாரத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளவும்.
குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் ரீஃபைன் சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களை பருக கூடாது. மேலும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருட்களையும் அதிகம் சேர்க்கக்கூடாது.
ஆல்கஹால்
மது ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது . இதன் மூலமும் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
அசைவ உணவுகள்
அசைவ உணவுகளில் உப்பு அதிகமாக உள்ளது .வாரத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்வதே போதுமானது .மேலும் வருத்த அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுநீர் கற்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
புரதம் அசைவ உணவுகளில் அதிகம் உள்ளது .நம் தசை வளர்ச்சிக்கு அவசியமானது .ஆனால் அசைவ புரதத்தை தவிர்த்து பருப்பு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ளவும் .
தக்காளி
தக்காளியில் அதிக அளவு ஆக்சிலேட் உள்ளது குறிப்பாக அதன் நடு தண்டு பகுதியை நீக்கிவிட்டு தான் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
சிறுநீர் கற்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்:
உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒரு நாள் ஒன்றுக்கு ஆறு முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் மேலும் ஆறு முறைக்கு கீழ் சிறுநீர் கழித்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
பழங்கள்
பழங்களில் சிட்ரிக் வகை பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது சிறுநீரக கற்களை கரைப்பதோடு சிறுநீர் கற்கள் உருவாகாமல் பாதுகாத்துக் கொள்கிறது. திராட்சை, கிர்ணி பழம் ,வாழைப்பழம், எலுமிச்சை ஸ்ட்ராபெரி ,போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
காய்கறிகள்
வாழைக்காய் ,வெள்ளரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், நூல் கோல், சௌசௌ ,சுரக்காய் போன்ற நீர் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீர்கள் கரைந்து வெளியேறிவிடும். பீன்ஸ் அதிகம் சேர்க்க வேண்டும் பீன்சை சூப்பாக அடிக்கடி செய்து குடித்து வரவும்.
கால்சியம்
கால்சியம் நிறைந்த உணவுகளை குறைவாக சேர்த்துக் கொள்ளவும். முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நம் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இந்த வழி முறைகளை பின்பற்றினால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.