இந்த செடியை சாதாரணமா நெனச்சீராதீங்க….!

Published by
லீனா

எருக்கச் செடி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி தான். இந்த செடி சாதாரணமாக சாலை ஓரங்களிலும், வெளி ஓரங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி.

எருக்கச் செடியின் பூக்களை வைத்து நமது சிறு வயதில் விளையாடுவதுண்டு. விளையாட்டிற்காக பயன்படுத்திய இந்த செடியில் உள்ள மறுத்து குணங்கள் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

Image result for எருக்கச் செடிஇந்த செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் எருக்கச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

இருமல்

இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த செடியின் இலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் எருக்கச் செடியின் இலையை பறித்து காய வைக்க வேண்டும்.

காய வைத்த எருக்க இலையை எரித்து அதிலிருந்து வரும் புகை சுவாசித்தால் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை நீக்கி குணமாக்கும்.

நெஞ்சு மற்றும் வயிற்று வலி

ஒரு வயதிற்கு மேல் படிப்படியாக நோய்கள் உருவாகிறது. அதில் நெஞ்சு வலி பலருக்கு ஏற்படுகிறது. சில வேளையில் இந்த நெஞ்சு வலி அதிகமான வேலை பளுவினாலும் ஏற்படுகிறது. நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலியை போக்க எருக்கச் செடி ஒரு சிறந்த மருந்தாகும்.

இருக்க செடியின் இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி விடும்.

புண்கள்

எருக்கச் செடியின் இலைகளை நன்கு காய வைத்து, அதை பொடித்து, புண் உள்ள இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.

சொறி சிரங்கு

சொறி சிரங்கு உள்ளவர்களுக்கு எருக்கச் செடியின் இலைச்சாறு நல்ல மருந்தாகும். எருக்கச் செடியின் இலைச்சாறுடன், மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெயில் வேக வைத்து, அதை தோலில் ஏற்படும், படை சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் இதில் இருந்து விடுதலை பெறலாம்.

பாம்பு விஷம்

பாம்பு கடித்தவர்கள் உடனடியாக எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.இதனை சாப்பிட்ட உடன் விஷம் இறங்கி விடும்.

குதிங்கால் வீக்கம்

குதிங்கால் வீக்கம் உள்ளவர்கள் எருக்க இலையில், பழுத்த இலையை எடுத்து, குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் சரியாகும்.

Published by
லீனா

Recent Posts

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

9 minutes ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

54 minutes ago

தமிழ்நாட்டில் போராட்டங்கள் மறுக்கப்படுகிறதா? கே.பாலகிருஷ்ணின் விமர்சனமும்.. சேகர்பாபுவின் விளக்கமும்…

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…

1 hour ago

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…

2 hours ago

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

3 hours ago