அடடே இந்த இலையில் இவ்வளவு நன்மைகளா….?

Default Image

இயற்கையில் உள்ள மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு வகையில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது. இயற்கை நமக்கு  கொடுத்த கொடை என்பதை  படைக்கப்பட்ட இந்த மரம் செடி, கொடிகள் நிரூபித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் முக்கனிகளில் முதன்மை கனியாக இருப்பது மா. இந்த மாமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு மருந்தாக பயன்படுகிறது.

மா மரத்தின் இலை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட இலை என்றே  கூறலாம்.இந்த இலை நமக்கு பல விதங்களில் மருந்தாக பயன்படுகிறது. இந்த இலை மருந்தாக மட்டுமல்லாமல் மாவிலை தோரணமாக கட்டப்பட்டு அலங்காரத்திற்கும்  பயன்படுகிறது.

மாவிலை தோரணம் ஏன் காட்டப்படுகிறது? :

Related image

அனைத்து நிகழ்ச்சிகளிலும், இந்த மாவிலை தோரணம் காட்டப்படுகிறது. ஏனென்றால் இந்த இலையில் கிருமிகளை கொள்ளக் கூடிய ஆற்றல் இந்த இலையில் உள்ளது. அதிகமாக மக்கள் கூடுகின்ற இடங்களில் இந்த இலையை கட்டினால், அந்த இடத்தில் பரவும் நச்சு கிருமிகள் அளிக்கப்பட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்க இது உதவுகிறது.

சத்துக்கள் :

மாவிலையில், புரதம், நார்சத்து, இரும்பு சத்து மற்றும் தாது உப்புக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

வாந்தி :

Related image

சிலருக்கு எதை சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளாது. இதனால் உடல் சோர்வடைகிறது. இப்படி அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள், மா இலைகளில் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வர வாந்தி வருவது குறையும்.

முடிப் பிரச்சனைகள் :

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே முடியில் ஏற்படும் பிரச்னை தான். இந்த பிரச்சனைகள் தீர்வதற்காக நாம் பல வழிகளில் செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுவதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

Image result for முடிப் பிரச்சனைகள் :

இளநரை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட மா இலைச்சாற்றுடன் பொன்னாங்கண்ணிசாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வருவது மிக நல்லது.

பித்தவெடிப்பு :

பித்தவெடிப்புள்ளவர்களின் நிலை மிக பரிதாபமான நிலை என்றே கூறலாம். இந்த நிலையில் உள்ளவர்களால், அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியாது, அவர்கள் நினைத்த வேலையை செய்ய முடியாது என பல பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு தீர்வாக மாவிலை உதவுகிறது.

Related image

பித்தவெடிப்புள்ளவர்கள் மாவிலையின் காம்பை உடைத்து, அதிலிருந்து வரும் பாலை பித்தவெடிப்புள்ள இடத்தில தடவி வர, பித்தவெடிப்பு வெகு விரைவில் குணமாகும்.

தொண்டை பிரச்சனை :

Image result for தொண்டை பிரச்சனை :

குளிர்காலங்களில் அதிகமானோர் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று தான் தொண்டை பிரச்சனைகள். இவ்வாறு தொண்டையில் தொண்டை கட்டு, குரல் கம்மல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், மா இலை கொழுந்துகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு தென் சேர்த்து மென்று சாப்பிட விரைவில் குணமாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்