அடடே…! இந்த காயைப் போய் சாதாரணமா நினைச்சிட்டோமே….!!!

eggplant

நம்மில் அனைவருக்கும் கத்தரிக்காயை பற்றி நன்கு தெரியும். இது நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக, எப்போது வேண்டுமானாலும் கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த காயை பொறுத்தவரையில் இது நம் அனைவருக்கும் ஒரு சாதாரணமான காய்கறியாக தெரியலாம். ஆனால் இதில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

கத்தரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சனைகள் அகன்று விடும்.

சத்துக்கள் :

நீர்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 காணப்படுகின்றன. இரும்புசத்து, புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளது.

நோய்கள் :

கத்தரிக்காயில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், கத்தரிக்காய் வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலசிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தக்கூடியது.

மூச்சு விடுதலில் சிரமம், தோல் மறைத்து விடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்