நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இன்றைய உலகில் மேலை நாட்டு கலாச்சாரம் பெருகி உள்ள நிலையில், நமது தமிழ் கலாச்சார உணவுகள் மறக்கப்பட்டுள்ளது. மேலை நாட்டு உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியது.
இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் பருமன் தான். இதற்கு நமது உடலில் அதிகரிக்கக் கூடிய கொழுப்பு தான் காரணம். இந்த கொழுப்பு நமது உடலில் உருவாகுவதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.
இன்றை நவீனமயமான உலகில் பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். காலையிலேயே வேலைக்கு செல்பவர்கள் காலை உணவை மிக வேகமாக சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்கிறது.
நமது உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. நமது உடலுக்கு தேவையான தண்ணீரை கிடைக்காத பட்சத்தில் அதுவும், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகுவதற்கு வழி வகுக்கிறது.
நம்மில் திகமானோர் அதிகமாக உட்கார்ந்து இருந்து வேலை பார்ப்பதை தான் விரும்புகிறோம். இப்படி இருந்தால், நமது உடலில் உள்ள கலோரிகள் கரையாமல், கொழுப்பாக சேர்ந்து விடுகிறது.
நமது உடலுக்கு போதுமான அளவு உறக்கம் தேவை. இந்த உறக்கம் இல்லாமையால், நமது உடல் ஆரோக்கியம் கெட்டு போவதற்கான பல வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகுவதற்கு போதுமான அளவு உறக்கமின்மையும் ஒரு காரணம் தான்.
நமது உடலுக்கு தேவையான போதுமான அளவு கொழுப்பு இல்லாத பட்சத்தில், நமது உடலில் கொழுப்பு உருவாகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, நமது உடலுக்கு தேவையான புரத சத்தை அளிக்க கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…